ஏறி இறங்கும் தங்கம் விலை
- செப்டம்பர் 29-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 13,640 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 1,09,120 ரூபாய்க்கு விற்பனை.
- செப்டம்பர் 30-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13,710 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 1,09,680 ரூபாய்க்கு விற்பனை.
- அக்டோபர் 1-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 13,680 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 1,09,440 ரூபாய்க்கு விற்பனை.
- அக்டோபர் 2-ம் தேதி கிராம் ஒன்று 95 ரூபாய் அதிகரித்து 13,775 ரூபாய்க்கும், சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து 1,10,200 ரூபாய்க்கு விற்பனை
இன்றைய தங்கம் விலை என்ன.?
தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்திருந்த நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அலற வைத்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 13,675 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,09,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி விலை என்ன.?
அதே நேரம் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான கிராம் ஒன்று 245 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
