TN Cabinet: ரூ.10,000 கோடி முதலீடு, ஸ்டார்ட்-அப்களுக்கு ஜாக்பாட் - 50% மானியம், ரூ.300 கோடி பேக்கேஜ்
TN Cabinet Space Tech: தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கை, ஸ்டார்ட-அப் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

TN Cabinet Space Tech: தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விண்வெளி தொழில் கொள்கை
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது, புதிய “தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு” அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தெரிவித்தார். முதலீடு, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய 3 முக்கிய இலக்குகளை கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் விளக்கமளித்தார்.
ரூ.10,000 கோடி முதலீடு:
மாநில அரசின் அறிவிப்பின்படி, பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக திகழ்கிறது. இதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த, புதிய செக்டர்களில் நமது வளர்ச்சி இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக, அட்வான்ஸ் செக்டர்ஸ் அதாவது விண்வெளி துறையில், தமிழகம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செலுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை-2025-க்கு அமைந்த வகையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய இலக்காக அடுத்த 5 ஆண்டுகளில், விண்வெளித் துறையில், 10,000 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்ப்பது இதன் முக்கிய இலக்கு. அதோடு, குறைந்தபட்சம் 10 ஆயிரம் நபர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்;, விண்வெளி துறைக்கு தகுதியான ஆட்களை உருவாக்குதல் அதாவது திறன் மேம்பாடு ஆகிய மூன்றும் விண்வெளி தொழில் கொள்கையின் முக்கிய நோக்கங்களாகும்.
எதிர்காலத்திற்கான கொள்கை:
பொதுவாக தமிழ்நாடு அரசு உற்பத்தித் துறையில் பெரும்பாலும் நமது கவனம் இருக்கும். ஆனால், இந்த முறை அரசின் கவனம் விண்வெளி துறை பக்கம் திரும்பியுள்ளது. எனவே, இது தமிழகத்தின் Space Tech race-ல் இந்தியாவில், ஏன் உலக அளவில் இருக்கும் இந்த போட்டியில் தமிழ்நாட்டின் பாய்ச்சலுக்கு மிகப்பெரிய ஒரு உத்வேகத்தை உருவாக்கியுள்ளது.
இதில் 25 கோடி ரூபாயில் இருக்கின்ற சிறிய கம்பெனிக்கும் (Startups) மிகப் பெரிய ஊக்கம் வழங்கும் அம்சம் இடம்பெற்றுள்ளது. விண்வெளி துறை வளர்ச்சி ஒவ்வொரு நாளும் அதிவேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பொழுது Al-யின் தாக்கம் உடன் சேர்ந்து உலகத்தில் இருக்கின்ற அனைத்து தொழில்நுட்பத்திலும், இந்தியாவில் ஏன் தமிழ்நாட்டிலேயே இப்பொழுது எது வேண்டுமானாலும் செய்யலாம். தமிழ்நாட்டில் ராக்கெட்டை பிரிண்ட் செய்ய முடியும் என்பதை அரசு சுட்டிக் காட்டுகிறது.
ஸ்டார்ட்-அப்களுக்கு ஜாக்பாட்:
எலான் மஸ்கின் நிறுவனம் சர்வதேச அளவில் சாதனை படைத்துக் கொண்டு இருக்க, அதற்குப் போட்டியாக நமது தமிழ்நாட்டில் இங்கே சென்னையில் ஒரு நிறுவனம் மிகச் சிறப்பான பணிகள் எல்லாம் செய்து வருகிறது. அத்தகைய ஸ்டார்ட்-அப்களை எல்லாம் ஊக்குவிக்கும் வகையில், புதிய கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் patents வாங்குவதற்கும் 50 சதவிகிதம் சலுகை நம்முடைய அரசாங்கமே வழங்கும். 300 கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகளுக்கு ஸ்பெஷல் பேக் ஒன்றை உருவாக்கியிருக்கிறோம்.
அதேபோல, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், ஸ்பேஸ் பே என்று ஒரு சில இடங்கள் அறிவிக்கப்பட்டு, அந்த இடத்தில் முதலீடுகள் வருமேயானால், அதற்கு ஸ்பெஷல் package கொடுப்பதற்கான வழிவகைகள் இந்த பாலிசியில் இருக்கிறது. ஊதிய மானியமாக முதலாம் ஆண்டு 30 சதவிகிதம், இரண்டாம் ஆண்டு 20 சதவிகிதம், அதற்கடுத்து, மூன்றாம் ஆண்டு 10 சதவிகிதம் என்ற ஊதிய அளவில் கூட ஊக்கத்தை இந்த பாலிசி தருகிறது.
உலகளவில் இருக்கும் பல தொழில் முனைவோர்களும் இனி நிச்சயமாக தமிழகத்தை நோக்கி வருவார்கள். குறிப்பாக, குலசேகரப்பட்டினம் போன்ற நமது தென் தமிழகத்தில் இருக்கும் பகுதிகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். தமிழகத்தில் இருக்கும் பிற பகுதிகளுக்கும் Space Tech சம்பந்தப்பட்ட தொழில்கள் இனி தமிழகத்தை நோக்கி மிகப்பெரிய அளவில் வர இருக்கும்” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















