ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இனி 'மஹாராஜா' விமானங்களில் பயணிகள் பல மாற்றங்களை அனுபவிக்க உள்ளார்கள்


ஏர் இந்தியா விமானங்களில் வழங்கப்படும் உணவு சேவைகளில் உடனடி மாற்றங்கள் வரவுள்ளன. இதுதொடர்பாக இந்தியா டுடே ஆங்கில டிவி, விமான நிறுவனம் ஏற்கனவே இன்று முதல் சில துறைகளுக்கான உணவுத் திட்டங்களை முழுமையாக  மேம்படுத்தி வருவதாக கூறியுள்ளது. காலப்போக்கில் பெரும்பாலான துறைகளில் படிப்படியாக மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது,


உணவுத் திட்டங்களை மேம்படுத்துதல்


இன்று முதல், மும்பை-டெல்லி, மும்பை-அபுதாபி, மும்பை-பெங்களூரு, மும்பை- நியூயார்க் மற்றும் மும்பை-லண்டன் வழித்தடங்களில் உணவுத் திட்டங்களில் மாற்றங்கள் இருக்கப்போகிறது.


முதலில் மாற்றங்களைக் காணும் விமானங்களின் விவரங்கள் இதோ:


ஜனவரி 27  - AI 864 BOM-DEL, AI 687 BOM-DEL, AI 945 BOM-AUH, AI 639 BOM-BLR


ஜனவரி 28  - AI 191 BOM-EWR, AI 806 BOM-DEL, AI 809 BOM-DEL, AI 660 BOM-DEL, AI 888 BOM-DEL, AI 867 BOM-DEL


ஜனவரி 29  - AI 268 BOM-DEL மற்றும் AI 131 BOM-LHR.


தாஜ் குழுமத்தின் தலைமையிலான ஏர்லைன் கேட்டரிங் சேவையான Taj SATS ஆல் இந்த உணவை மேம்படுத்தும் திட்டம் உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


உணவு சேவைக்கான SOP


ஒவ்வொரு முக்கிய உணவிற்கும் முன்பு நிலையான இயக்க  நடைமுறை (SOP) படி குளிர்பான சேவையை நடத்த வேண்டும் என்று அனைத்து கேபின் பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் மற்றும் வணிக வகுப்புகளில் குளிர்பான சேவைக்கான சர்வீஸ் டிராலியையும், எகானமி வகுப்பில் குளிர்பான சேவையுடன் கூடிய பார்  வண்டிகளைப் பயன்படுத்துவதை இன்றியமையாததாக்கும்.


ரத்தன் டாடாவின் மெசேஜ்


ஏர் இந்தியா 'டாடா நிறுவனமாக' மாறும் போது, ​​விமானத்தில் அறிவிப்புகளில் மாற்றங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், இந்த வரலாற்று மாற்றத்தைக் குறிக்கும் டாடா குழுமத்தின் 84 வயது முகமான ரத்தன் டாடாவின் எழுச்சிமிக்க குரலை நீங்கள் கேட்கலாம். 'மகாராஜா' வீடு திரும்பும்போது ரத்தன் டாடாவின் சிறப்பு ஆடியோ முகவரி விமானங்களில் ஒலிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஒயின் கிளாஸ்கள் , மெலமைன் கப்ஸ்


பிஸினஸ் மற்றும் முதல் வகுப்பு பயணிகளுக்கு பானங்களை வழங்குவதற்கு ஹைபால் மற்றும் ஒயின் கிளாஸ்களைப் பயன்படுத்துமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேபோல், எகானமி கிளாசில் தேநீர் மற்றும் காபி சேவைக்கு முன்கூட்டியே அமைக்கப்பட்ட மெலமைன் கப்ஸ்களையும், எகனாமி மற்றும் முதல் வகுப்புகளில் பீங்கான் கப்களையும் பயன்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.


செய்தித்தாள்கள், இதழ்கள்


பிஸினஸ் மற்றும் முதல் வகுப்பு பயணிகளுக்கு செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் புறப்படுவதற்கு முன்னதாக வழங்கப்பட வேண்டும் என்றும், எகானமி வகுப்பில் உள்ள பத்திரிகை ரேக்குகளில் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எகானமி கிளாஸ்க்கான போர்வைகள், தலையணைகள்


அனைத்து எகானமி மற்றும் முதல் வகுப்பு பயணிகளுக்கும் போர்வைகள் மற்றும் தலையணைகள் இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும். எகானமி கிளாஸ் பயணிகளின் தேவைக்கேற்ப பயன்படுத்த 50 போர்வைகள், தலையணைகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.


நேர்த்தியான உடை


அனைத்து கேபின் குழுவினருக்கும் அனுப்பப்பட்ட தகவலில், நேர்த்தியான உடையணிந்து, ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


பயணிகள் விருந்தினர்களாக இருப்பார்கள்


விமானக் குழு மேற்பார்வையாளரின் பங்கும் மிக முக்கியமானதாக இருக்கும் என்று விமான நிர்வாகம் கூறியுள்ளது. அவர்கள் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் சேவை தரத்தை விருந்தினர்களுக்கு வழங்குவதற்காக முழு விமானத்தையும் மேற்பார்வையிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளை "விருந்தினர்" என்றே அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஆன் டைம் பெர்மான்ஸ்


பணியாளர்களுக்கான தகவல்தொடர்புகளில், சரியான நேரத்தில் செயல்திறன் முக்கியமானது என்று ஏர் இந்தியா நிர்வாகம் எடுத்துரைத்துள்ளது.