இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,059.12 அல்லது 1.47% புள்ளிகள் உயர்ந்து 73,560.13 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 324.55 அல்லது 1.44% புள்ளிகள் உயர்ந்து 22,300.65 ஆக வர்த்தகமாகியது.


காலை 11- மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்திருந்தது. சர்வதேச சந்தைகளில் நிலவும் நேர்மறையான போக்கு, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களினால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


டாடா ஸ்டீல், ஜெ.எஸ்.டபுள்யு, லார்சன், ஹிண்டால்கோ, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பி.பி.சி.எல்., டாடா மோட்டர்ஸ், டைட்டன் கம்பெனி, க்ரேசியம், இந்தஸ்லேண்ட் வங்கி, மாருதி சுசூகி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஓ.என்.ஜி.சி., பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், ஐ.டி.சி., அதானி எண்டர்பிரைசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஈச்சர் மோட்டர்ஸ், பாரதி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ், நெஸ்லே, விப்ரோ, டிவிட்ஸ் லேப்ஸ்,  டெக் மெஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின. 


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


பிரிட்டானியா, இன்ஃபோசிஸ், சன் பார்மா, சிப்ளா, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.


பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. ஐரோப்பிய பங்குச்சந்தை நேர்மறையான முறையில் வர்த்தகமானது இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.