தொடர்ந்து சரிந்து வந்த மும்பை பங்குச்சந்தை இன்று உயர்வை அனைவரும் எதிர்பார்த்தது போலவே உயர்வை சந்திக்க தொடங்கியுள்ளது. இந்த ஏற்றம் பட்ஜெட் அறிப்புகளை எதிர்பார்த்து இருப்பதாக பங்குச்சந்தை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஜனவரி மாதத்தின் முதல் பாதியில் சிறப்பான லாபத்தைப் பதிவு செய்த நிலையில், ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பு காரணமாகவும், அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு எதிரொலி காரணமாகப் பட்ஜெட் அறிவிக்கும் முன்பு மும்பை பங்குச்சந்தை மிகவும் மோசமான சரிவை பதிவு செய்தது.


இந்நிலையில் ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்யத் தற்போது இருக்கும் ஓரே வாய்ப்பாக இருந்தது பட்ஜெட் அறிவிப்புகள் மட்டும்தான். ஜனவரி 17ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 61,308 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியிருந்த நிலையில் பட்ஜெட் அறிவிப்புக்கு முன்பாக 56,718 புள்ளிகள் வரையில் சரிந்தது. இதில் குறிப்பாக வெறும் 7 நாட்களில் சென்செக்ஸ் குறியீடு மட்டும் சுமார் 4,590 புள்ளிகள் வரையில் சரிந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 1,377 புள்ளிகளை இழந்தது.



ஆனால் இன்று பட்ஜெட் அறிவிக்கப்பட்டதுமுதல் பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது. இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 739 புள்ளிகள் அதிகரித்து 58,016 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 240 புள்ளிகள் அதிகரித்து 17,350 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்யை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் தொடர்பான பல எதிர்பார்ப்புகள் அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ளன.


பல தொலைநோக்கு திட்டங்கள் வரும் என்ற நம்பிக்கை பல தரப்பில் முன்வைக்கப்படுவதால், பங்குச்சந்தை சில நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு பெற துவங்கியுள்ளது. அதன்படி 30-பங்கு சென்செக்ஸ் தளங்களில், என்டிபிசி, டாடா ஸ்டீல், சன் பார்மா, பார்தி ஏர்டெல், டைட்டன், விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, எம்&எம், மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை 1-3 சதவீதம் வரை உயர்ந்தன. ஓஎன்ஜிசி, டாடா கன்ஸ்யூமர் மற்றும் ஐஓசி ஆகியவை நிஃப்டியில் கூடுதல் லாபம் ஈட்டியுள்ளன. மறுபுறம், ஹெச்டிஎஃப்சி ட்வின்ஸ் மற்றும் மாருதி பங்குச்சந்தைகளில் மட்டும் 148 புள்ளிகள் குறைந்தன. ஒட்டுமொத்த சந்தைகளில், பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 1 சதவித்திற்கும் மேலாக ஏற்றம் கண்டன. 



ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு நிபுணர் வி.கே.விஜயகுமாரை கூறியதாவது, “முதலீட்டாளர்களின் பார்வையில் சந்தையில் மூன்று போக்குகள் முக்கியமானவை. ஒன்று, எஃப்ஐஐகளின் இடைவிடாத விற்பனை (ஜனவரியில் இதுவரை சுமார் ரூ. 33,000 கோடி) குறுகிய காலத்தில் சந்தைக்கு வலு சேர்க்கிறது.


இரண்டு, நிஃப்டியில் தொழில்நுட்பம் முதல் வங்கி வரையிலும், குறைந்த அளவில் ஆட்டோமொபைல் துறையிலும் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. மூன்று, அதிக மதிப்புள்ள வளர்ச்சிப் பங்குகள் அடிவங்குகின்றன, அவற்றின் மதிப்பீடுகள் மெதுவாக யதார்த்த நிலைகளுக்கு வருகின்றன" என்று கூறினார்.