Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உச்சத்தை தொட்டது. 


வர்த்தக நேர முடிவில்,  மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 76.01 அல்லது 0.11% புள்ளிகள் உயர்ந்து 67,543.00 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 33.10 அல்லது 0.16 % புள்ளிகள் உயர்ந்து 20,103.10 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


ஈச்சர் மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, அப்பல்லோ மருத்துவமனை, எம் & எம், ஓ.என்.ஜி.சி., நெஸ்லே, பவர்கிர்ட் கார்ப், ஜியோ ஃபினான்சியல், பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், இன்ஃபோசிஸ், சிப்ளா, லார்சன், பஜாஜ் ஃபினான்ஸ், விப்ரோ, மாருதி சுசூகி, ஹீரோ மோட்டர்கார்ப், ரிலையன்ஸ், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.டி.சி., கோல் இந்தியா, பிரிட்டானியா, சன் ஃபார்மா, டி,.சி,எஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டாடா மோட்டர்ஸ், க்ரேசியம், பாரதி ஏர்டெல்,ம் டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ்  உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.


இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ்,  நிஃப்டி வரலாறு காணத அளவு உச்சம் தொட்டது. நிஃப்டி 20 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகமாகியது. சென்செக்ஸ் 67 ஆயிரத்து 500 புள்ளிகளை தொட்டது. 


கச்சா எண்ணெய் விலை உலக அளவில் அதிகரித்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. இந்த வாரம் முழுக்க அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் என்று சொல்லப்படுகிறது. ரூபாய் மதிப்பு ரூ.82.70 முதல் 83.30 வரை என வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இன்றைய வர்த்தக நேர முடிவில் 2302 பங்குகள் லாபத்துடனும், 1243 பங்குகளின் மதிப்பும் நஷத்துடனும் இருந்தன. 145 பங்குகள் மாற்றமின்றி தொடர்ந்தன.  யு.பி.எல்., ஹிண்டால்கொ ஃப்ரெண்ட், FMCG, எண்ணெய் நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட பங்குகளின் மதிப்பு உயர்ந்திருந்தது. வங்கிகள், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு உயர்ந்ததால் பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 


உருக்கு உற்பத்தி அதிகரிப்பு


நாட்டில் உருக்கு உற்பத்தி கடந்த ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் 5 சதவீதம் உயா்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  ஆய்வு நிறுவனமான ஸ்டீல்மின்ட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் நாட்டின் உருக்கு உற்பத்தி 6.6 கோடி டன்னாக உள்ளது. இது, முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 5 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது.  நடப்பாண்டின் இரண்டாம் பாதியிலும்  இந்த வளர்ச்சி தொடரும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். 


2022-ஆம் ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் உருக்கு உற்பத்தி 6.3 கோடி டன்னாக இருந்தது. மதிப்பீட்டு மாதங்களில் முக்கிய உருக்கு உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திறனை அதிக அளவில் பயன்படுத்தின.  கடந்த ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் உருக்கு உற்பத்தி அதிகரித்துள்ளது. உருக்கு ஏற்றுமதியில் சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது  குறிப்பிடத்தக்கது.


சீனாவில் இருந்து மலிவான விலையில் உருக்குப் பொருள்கள் கிடைப்பதால் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யும் விகிதம் குறைந்து. இதன் காரணமாகவே உருக்கு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




மேலும் வாசிக்க..


Aadhar Linking: போஸ்ட் ஆப்பிஸ் அக்கவுண்ட் இருக்கா? இன்னும் 20நாள் தான் இருக்கு.. இதை கட்டாயம் செஞ்சி முடிச்சிருங்க!