Stock Market Update:  இந்திய பங்குச்சந்தை இரண்டு நாள் சரிவில் இருந்து மீண்டு ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.


பங்குச்சந்தை:


மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 405.53 அல்லது 0.62%  புள்ளிகள் உயர்ந்து 65,631.51 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 109.65 அல்லது 0.56 % புள்ளிகள் உயர்ந்து 19,545.75 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. இந்த வார தொடக்கத்திலும் கடும் சரிவுடன் வர்த்தமான பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் வர்த்தகமானது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


லார்சன், பஜாஜ் ஆட்டோ, டைட்டன் கம்பெனி, டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், ஈச்சர் மோட்டர்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்.பி.ஐ., டாடா மோட்டர்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப்.,மாருட்ஜி சுசூகி, ஆக்ஸிஸ் வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஃபின்சர்வ், கோல் இந்தியா,விப்ரோ, அதானி போர்ட்ஸ்,டெக் மஹிந்திரா, பிரிட்டானியா, இந்தஸ்லேண்ட் வங்கி, அதானி எண்டர்பிரைசர்ஸ், எஸ்.பி.ஐ. லைப் இன்சுரா உள்ளிட்ட நிறுவனங்கள்  பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


பவர்கிரிட் கார்ப், என்.டி.பி.சி., க்ரேசியம், நெஸ்லே, டிவிஸ் லேப்ஸ், டாக்டர். ரெட்டி லேப்ஸ்,அப்பல்லோ மருத்துவமனை, ஐ.டி.சி. உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.


இன்றைய வர்த்த நேர தொடக்கத்தில் க்ரீனில் வர்த்தகமான பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவிலும் 
ஏற்றத்துடன் முடிந்தது. சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை உயர்ந்தது. வர்த்த நேர தொட்டக்கத்தில் இருந்தே சென்செக்ஸ் 65 ஆயிரத்து எழுநூறு புள்ளிகளை தொட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, PMI டேட்டா உள்ளிட்ட்வைகளால் பங்குச்சந்தை ஏற்றம் கண்டது. ரிசர்வ் வங்கியின் கொள்கையின் படி வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.