Stock Market Update: இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் இன்று முடிந்துள்ளது.


பங்குச்சந்தை:


மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 900.91 அல்லது 1.41 % புள்ளிகள் குறைந்து 63,148.15 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 264.90 அல்லது 1.39% சரிந்து 18,857.25 ஆக வர்த்தகமாகியது. கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இந்நிலையில், இந்த வாரமும் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. 


இன்றைய வர்த்தக நேரத்தில் மட்டும் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்தது. நிஃப்டி 250 புள்ளிகள் சரிந்தது. இஸ்ரேல் - ஹமாஸ் போரின் தாக்கம் உலகளாவிய அளவில் பங்குச் சந்தைகளில் எதிரொலித்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்காவின் பொருளாதார நிலை போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்திய பங்குச்சந்தையும் கடந்த ஆறு நாள்களில் 3,300 புள்ளிகள் சரிந்தது. 
 
இந்த வாரம் முழுக்க மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முன்னணி நிறுவனங்களில் பங்குகள்கூட சரிவை சந்தித்தன. இது முதலீட்டாளர்களை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. காலை வர்த்தக நேர தொடக்கத்தின்போது, சுமார் 15 நிமிடங்களில் ரூ.3.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மெட்டல், பொதுத்துறை வங்கிகள் தவிர்த்து மற்ற அனைத்து துறைகளும் கடும் சரிவை சந்தித்தன. 


உள்நாட்டு சந்தை நிலவரம், டாலர் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் குறைந்தது. 


வர்த்த நேர முடிவில், 1211 பங்குகள் அட்வான்ஸ் நிலையிலும், 1943 பங்குகள் சரிவுடனும், 101 மாற்றமின்றியும் இருந்தன. 


பஜாஜ் ஃபினான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், கடும் சரிவை சந்தித்தன.


இந்திய ரூபாய் மதிப்பு 


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.23 ஆக இருந்தது. 


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


ஆக்சிஸ் வங்கி, ஐ.டி.சி., ஹெட்.சி.எல்., டெக், அதானி போர்ட்ஸ், என்.டி.பி.சி., உள்ளிட்ட நிறுவனங்கள்  பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


எம் & எம், பஜாஜ் ஃபினான்ஸ், யு.பி.எல்., ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே, டைட்டன் கம்பெனி, ஜெ.எஸ்.டபுள்யு, டெக் மஹிந்திரா, டைட்டன் கெம்பெனி, அதானி எண்டர்பிரைசிஸ், பாரதி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி., ஈச்சர் மோட்டர்ஸ், சன் ஃபார்மா, பஜாஜ் ஆட்டோ, டாக்டர். ரெட்டி லேப்ஸ், கோடாக் மஹிந்திரா, கோல் இந்தியா, க்ரேசியம், எஸ்.பி.ஐ., டாடா மோட்டர்ஸ், மாருதி சுசூகிஒ. டி.சி.எஸ்.,ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், டிவிஸ் லேப்ஸ், விப்ரோ, ஹீரோ மோட்டர்கார்ப், டாடா கான்ஸ் ப்ராட், ஐ.சி,.ஐ.சி.ஐ. வங்கி, சிப்ளா, பிரிட்டானியா, பவர்கிரிட் கார்ப், எஸ்.பி.ஐ. லைப் இன்சுரா, உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.


கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, சென்சென்ஸ், நிப்ஃடி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. சென்செக்ஸ் 66 ஆயிரம் புள்ளிகளும் நிப்ஃடி 20 ஆயிரம் புள்ளிகளிலும் வர்த்தகமானது. ஆனால், இன்று சென்செக்ஸ் 66 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 63 ஆயிரம் புள்ளிகளாக சரிந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது இதற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


வரும் செசென்களிலும் வர்த்தகம் சரிவுடன் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் சரிவில் இருந்து பங்குச்சந்தை மீண்டுவர முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.