வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு விலைகள் குறைந்ததால் குறியீட்டு எண் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென் செக்ஸ் 1,172 புள்ளிகள் சரிந்து 57, 167 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாகியுள்ளன. இன்ஃபோசிஸ் டெக்னாலஜி 7.27 சதவீதமும், எச்.டி.எப்ஃ சி 4.6 சதவீதமும், டெக் மகிந்திரா பங்கு 4.67 சதவீதமும் விலை குறைந்து வர்த்தகமாயின.
விப்ரோ, டிசிஎஸ் பங்குகள் 3.6 சதவீதமும் எச் சிஎல் டெக், ஏசியன் பெயிண்ட் பங்குகள் 3.6 சதவீதமும் விலை குறைந்து விற்பனையாகின. கோட்டக் வங்கி, எஸ்.பி.ஐ., பார்த்தி ஏர்டெல், எல் அண்ட் டி உள்ளிட்ட பங்குகள் 1% வரை விலை குறைந்து வர்த்தகமாயின. என்.டி.பி.சி பங்கு 6 சதவீதமும் டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, டைட்டன் பங்குகள் ஒரு சதவீதத்துக்கு மேல் விலை உயர்ந்து கைமாறின. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி302 புள்ளிகள் சரிந்து 17,174 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.