இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. 


வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 33.02 அல்லது 0.041% புள்ளிகள் உயர்ந்து 81,086.21 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 11.65 அல்லது 0.047% புள்ளிகள் உயர்ந்து 24,823.15 ஆக வர்த்தகமாகியது.


இந்திய ரூபாய் மதிப்பு:


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 82.90 ஆக இருந்தது.


24 நிறுவனங்களுக்கு பங்குச்சந்தையில் தடை:


அனில் அம்பானியின் உள்ளிட்ட 4 பேர் மற்றும் 24 நிறுவனங்களுக்கு பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய தடை விதித்து SEBI உத்தரவிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (SEBI) நடவடிக்கை எடுத்துள்ளது.  அனில் அம்பானிக்கு பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ரூ. 25 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் மற்றும் அதன் முன்னாள் அதிகாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு பங்குச்சந்தையில் 6 மாதங்களுக்குத் தடை மற்றும் 6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


 ரிலையன்ஸ் எக்ஸ்சேஞ்ச் நெக்ஸ்ட் லிமிடெட், ரிலையன்ஸ் யூனிகார்ன் என்டர்ப்ரைசஸ் பிரைவேட் லிமிடெட்,ரிலையன்ஸ் கமர்சியல் பைனான்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் தடை விதிகக்ப்பட்டுள்ளது. 


ஜப்பான் யென் மதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது. ஜப்பான் அரசு வட்டி விகிதத்தில் மாற்றம் செய்ய இருப்பதாக தெரிகிறது. 






லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:


பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, டாடா மோட்டர்ஸ், சன் ஃபார்மா, பாரதி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹீரோ மோட்டர்கார்ப், எம்&எம், பஜாஜ் ஃபின்சர்வ், ஜெ.எஸ்.டபுள்யு, ஹெச்.யு.எல், பவர்கிரிட் கார்ப், பி.பி.சி.எல். இந்தஸ்லேண்ட் வங்கி, அப்பல்லோ மருத்துவமனை, அல்ட்ராடெக் சிமெண்ட், ஐ.டி.சி., மாருதி சுசூகி, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் மட்டும் லாபத்துடன் வர்த்தகமாகின. 


ஓ.என்.ஜி.சி., விப்ரோ, டிவிஸ் லேப்ஸ், எல்.டி.ஐ. மைண்ட்ரீ, ஏசியன் பெயிண்ட்ஸ், இன்போசிஸ், டைட்டன் கம்பெனி, ஹெச்.சி.எல்., நெஸ்லே, டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா, பிரிட்டானியா, டாடா கான்ஸ் ப்ராட், அதானி எண்டர்பிரைசிஸ், ஈச்சர் மோட்டர்ஸ், சிப்ளா, எஸ்.பி.ஐ., ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி., என்.டி.பி.சி., ஆக்சிஸ் வங்கி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, க்ரேசியம், லார்சன், டாக்டர் ரெட்டி லேப்ஸ், கோடாக் மஹிந்திராஅ, பஜாஜ் ஃபினான்ஸ், ஹிண்டால்கோ, அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.