இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. பங்குச்சந்தை இரண்டு நாட்களாக கடும் சரிவுடன் வர்த்தகமானது.


மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,176.45 அல்லது 1.49% புள்ளிகள் சரிந்து 78,041.59 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 364.20 அல்லது 1.52% புள்ளிகள் சரிந்து 23,587.50 ஆகவும் வர்த்தகமாகியது. 


லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:


டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், நெஸ்லே, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி , ஹெச்.டி.எஃப்.சி. லைஃப் ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 


டெக் மஹிந்த்திரா, ட்ரெண்ட், இந்தஸ்லேண்ட் வங்கி, எம்&எம், ஆக்ஸிஸ் வங்கி, அதானி எண்டர்பிரைசிஸ், டாடா மோட்டர்ஸ், பாரத் எலக்ட்ரிக்கல், கோல் இந்தியா, எஸ்.பி.ஐ., விப்ரோ, டி.சி.எஸ்., லார்சன், ஸ்ரீராம் ஃபினான்ஸ், சிப்ளா, பஜாஜ் ஆட்டோ, அல்ட்ராடெக் சிமெண்ட், ரிலையன்ஸ், க்ரேசியம், ஓ.என்.ஜி.சி., டாடா கான்ஸ், ப்ராட், பி.பி.சி.எல்., அதானி போர்ட்ஸ், பிரிட்டானியா, பவர்கிரிட் கார்ப், டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டர்கார்ப், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோசிஸ், என்.டி.பி.சி., ஹெட்.டி.எஃப்.சி. வங்கி, ஹெச்.சி.எல். வங்கி, ஹெச்.சி.எல். டெக், ஹிண்டாலோ, கோடாக் மஹிந்திரா, பஜாஜ் ஃபினான்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், சன் ஃபார்மா, ஈச்சர் மோட்டர்ஸ், சன் ஃபார்மா, மாருதி சுசூகி, ஏசியன் பெயின்ட்ஸ், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, டைட்டன் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.


காரணம் என்ன?



  • அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 4.50%-ல் இருந்து 4.25% ஆக குறைத்துவிட்டது. இருந்தாலும் சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இன்னும் குறைக்கலாம் என்பதால் சந்தையில் அந்த முடிவு எதிரொலித்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். இது இந்திய பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்தது. 

  • வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்வதும் சரிவுக்கு காரணம்.

  • அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு 85.34 ஆக இருந்தது. 

  • இந்தியாவின் மேக்ரோ பொருளாதார சரிவு, 1,2 காலாண்டில் இந்திய கார்ப்ரேட் நிறுவனங்களின் வருவாய் ஏற்றம் காணுமா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.