Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.  மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 229.75 அல்லது 0.34 % புள்ளிகள் சரிந்து 71,685.66 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 42.60 அல்லது 0.21% சரிந்து 21,690.65 ஆக வர்த்தகமாகியது.


இந்த வார தொடக்கத்தின் முதல் நாள் ஏற்றத்துடன் வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை, இன்றைய (30.01.2024) வர்த்த நேர தொடக்கத்திலும் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கிய கொஞ்சம் நேரத்திலேயே சரிவை சந்தித்தது. மற்ற ஆசிய சந்தைகள் ஏற்றத்துடன் வணிகமானது. ஹாங்காங் பங்குச்சந்தையும் சரிவுடனேயே வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


ஓ.என்.ஜி.சி., பி.பி.சி.எல்., ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், விப்ரோ,டாடா மோட்டர்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், பாரதி ஏர்டெல்,யு.பி.எல்., க்ரேசியம், பஜாஜ் ஆட்டோ, ஈச்சர் மோட்டர்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி,டி.சி.எஸ்., டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ், எஸ்.பி.ஐ., டிவிஸ் லேப்ஸ், அதானி போர்ட்ஸ், பிரிட்டானியா, சிப்ளா,  ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின. 


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..


பஜாஜ் ஃபினான்ஸ், என்.டி.பி.சி., ரிலையன்ஸ், ஐ.டி.சி., டைடன் கம்பெனி, கொடாக் மஹிந்திரா,கோல் இந்தியா, சன் ஃபார்மா, அல்ட்ராடெல் சிமெண்ட், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, லார்சன், பவர்கிரிட் கார்ப்ம், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எம் & எம், அதானி எண்டர்பிரைசர்ஸ்,நெஸ்லே, மாருதி சுசூகி, அப்பல்லோ மருத்துவமனை ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.


இந்திய பங்குச்சந்தை வர்த்தநேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 801.67 அல்லது 1.11 % புள்ளிகள் சரிந்து 71,139.90 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 215.50 அல்லது 0.99% சரிந்து 21,522.10 ஆக வர்த்தகமாகியது.


பொதுத்துறை வங்கிகள், நிறுவனங்கள் எல்லாம் சரிவிலேயே இருந்தன.  Midcap index  விற்பனைக்கான அழுத்தத்துடன் இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.11 ஆக இருந்தது.




மேலும் வாசிக்க..


Budget 2024: மத்திய பட்ஜெட்டில், சேலம் விமான நிலையத்தில், இரவில் விமானம் தரையிறங்கும் வசதி செய்யப்படுமா?