இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது
வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 434.46 அல்லது 0.66 % புள்ளிகள் சரிந்து 65,104.96 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 99.75 அல்லது 0.51 % புள்ளிகள் சரிந்து 19,365,25 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
லாபத்துடன் வர்த்தமான நிறுவனங்கள்
அதானி போர்ட்ஸ், டைட்டன் கம்பெனி, அதானி எண்டர்பிரைசஸ், பஜார்ஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், பஜார்ஜ் ஃபின்சர்வ், டாடா கன்ஸ், டாகடர் ரெட்டி லேப்ஸ், ஆக்சிஸ் வங்கி, டெக் மகேந்திரா, ஹீரோ மோட்டர்கார்ப், சன் ஃபார்மா, டாடா ஸ்டீல், பிரிட்டானியா ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
ஐ.டி.சி., பவர்கிரிட் கார்ப்ரேசன், டிவிஸ் லேப்ஸ், ரிலையன்ஸ், லார்சன், நெஸ்லே, கோடாக் மஹிந்திரா, அப்பல்லோ மருத்துவமனை, க்ரேசியம், ஈச்சர் மோட்டர்ஸ், பஜார்ஜ் ஃபினான்ஸ், யு.பி.எல்., டாடா மோட்டர்ஸ், டி.சி.எஸ்., எஸ்.பி.ஐ. லைஃப் இன்சிரன்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி,, இன்ஃபோசிஸ், மாருதி சுசூகி, ஏசியன் பெயின்ட்ஸ்,கோல் இந்தியா, விப்ரோ, சிப்ளா, ஹெச்.சி.எல். டெக்., பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது எரிபொருள் தேவையை குறைக்கும் வாய்ப்பிருப்பதால் கடந்த மூன்று நாட்களாக எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கிறது.
பிரண்ட் க்ரூட் ஃப்யூசர்ஸ் என்ற கச்சா எண்ணெய் விற்பனை கம்பெனியில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 83.45 ஆக இருந்தது.
இந்திய ரூபாயின் மதிப்பு பத்து மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. உள்ளூர் சந்தையின் சரிவு காரணமாக பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது.
வர்த்த நேர முடிவில், 1777 பங்குகள் லாபத்துடனும், 1696 பங்குகள் சரிவுடனும் 152 பங்குகள் மாற்றமின்றியும் தொடர்ந்தன.
பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சரிவுடன் வர்த்தகமாகின.
ரூபாய் மதிப்பு விவரம்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் குறைந்து 83.15 ஆக இருந்தது. கடந்த திங்கள்கிழமை இது 82.95 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.