இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 984.23 அல்லது 1.25% புள்ளிகள் சரிந்து 77,690.95 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 324.40 அல்லது 1.36% புள்ளிகள் சரிந்து 23,559.50 ஆகவும் வர்த்தகமாகியது. 


இந்திய பங்குச்சந்தை கடந்த ஒன்றரை மாதங்களாகவே சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. நவம்பர் மாதத்தில் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து ஐந்தாவது செசன் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.உலக பொருளாதாரத்தில் நிலவும் சரிவு, டாலர் இன்டெக்ஸ் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு, அந்நிய முதலீட்டளார்கள் பங்குகளை விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. சென்செக்ஸ் 1,015.53 புள்ளிகள் 1.3%மும் நிஃப்டி 338 புள்ளிகள் 1.4%மும் வீழ்ச்சியடைந்தது. 


சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் செப்டம்பர் மாதத்தில் 80 ஆயிரம், 25 ஆயிரம் புள்ளிகள் முறையே உச்சம் தொட்டத்து. ஆனால், ஐந்து செசனில் தொடர் வீழ்ச்சியால் கிட்டதட்ட 4 சதவீதம் சரிவடைந்துள்ளது. நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் 2.5% வரை குறைந்தது.


பங்குச்சந்தை கடும் சரிவு தொடர்பாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கையில்,” அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதால் சந்தைகளில் high volatility ஏற்படவும், டாலர் இன்டெக்ஸ் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் பங்குச்சந்தையில் மாற்றம் ஏற்படுவது வழக்கம்,” எனத் தெரிவித்துள்ளனர்.


முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..


பங்குச்சந்தை நிலவரத்தை கவனத்திக்கு அதற்கேற்றவாறு முதலீடு செய்ய வேண்டும். சிமெண்ட், மெட்டல், பெட்ரோலியம் ஆகிய துறைகள் வள்ர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. வங்கி, டிஜிட்டல் நிறுவனங்கள், ஹோட்டல்,ஃபார்மா, ஐ.டி. உள்ளிட்ட துறைகளில் முதலீட்டு செய்வது இப்போதைக்கு பாதுகாப்பானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


ரூபாய் மதிப்பு சரிவு:


அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு பைசா குறைந்து 84.40 ஆக இருந்தது. பல்வேறு காரணங்களால் இந்திய ரூபாய் மதிப்பி இந்த வாரத்தில் 8-10%  வரை சரியலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


டாலர் இன்டெக்ஸ் உயர்வு:


டாலர் இன்டெக்ஸ் 1.8 சதவீதம் நவம்பர் மாதத்தில்  உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிகர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதும் டாலர் மதிப்பு ஜூலை மாதத்தைவிட உயர்ந்து 105.98 ஆக பதிவானது. US 10-year bond yields 4.42% ஆக உயர்ந்துள்ளது. 


Foreign Portfolio Investors (FPIs) விற்பனை:


அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை விற்பனை செய்வது  32-வது செசன் ஆக தொடர்கிறது.  Foreign Institutional Investors (FIIs) இந்திய பங்குச்சந்தை நவம்பர் மாதத்தில் ரூ.23,911 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் குறைப்பு அறிவிப்பு தாமதமாகி வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதங்களில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் வைத்துள்ளது.


லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:


பிரிட்டானியா, என்.டி.பி.சி., டாடா மோட்டர்ஸ், ஹெச்.யு.எல்.  ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 


ஹீரோ மோட்டர்காஃப், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், எம்$எம், ஈச்சர் மோட்டர்ஸ், பாரத் எலக்ட்ரிக்கல், அதானி போர்ட்ஸ், ஸ்ரீராம் ஃபினான்ஸ், பஜாஜ் ஆட்டோ, அப்பல்லோ மருத்துவமனை, ஜெ.எஸ்.டபுள்யு, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, கோடாக் மஹிந்திரா, அதானி எண்டர்பிரைசிஸ், ரிலையன்ஸ், கோல் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபினான்ஸ், டாடா கான்ஸ் ப்ராட், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், பவர்கிரிட் கார்ப், ஓ.என்.ஜி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சிப்ளா, லார்சன், சன் ஃபார்மா, டி.சி.எஸ்., நெஸ்லே, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, அல்ட்ராடெக் சிமெண்ட், க்ரேசியம், மாருதி சுசூகி, டெக் மஹிந்திரா, டிரெண்ட், ஹெச்.டி.எல். டெக், டைட்டன் கம்பெனி, விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.டி.சி., இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.