Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் தொடங்கியுள்ளன.


இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 124.35 புள்ளிகள் அதிகரித்து 61,634.93 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 38 புள்ளிகள் அதிகரித்து 18,305.25 புள்ளிகளாக உள்ளது. இன்று பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






லாபம் - நஷ்டம்


டாடா கான்ஸ், அப்போலோ மருத்துவமனை, யுபிஎல், எச்டிஎஃப்சி, பிபிசிஎல், ஓஎன்ஜிசி, எம்&எம், எச்சிஎல் டெக், டெக் மகேந்திரா, விப்ரோ, ஐசிஐசி வங்கி, லார்சன், பிரிட்டானியா, இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், கோல் இந்தியா, பஜாஜ் பின்சர்வு, மாருதி சுசிகி, டாடா  ஸ்டீல், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


அதானி எட்டர்பிரிஸ், டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், கோடக் மகேந்திரா, அதானி போர்ட்ஸ், நெஸ்டல், சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, ஹிரோ மோட்டோ கோப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


தாக்கம்:


உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அண்டை நாடான போலந்து நாட்டில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. நேட்டோ நாடுகளில் உறுப்பினராக இருக்கும் போலந்து மீது ரஷ்யாவின் தீடீர் ஏவுகணை தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.


உக்ரைன் மீது ரஷ்யா இடையிலானா போர்  மீண்டும் சூடுபிடிக்குமா என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கிறது. இதனால் ஆசிய பங்குச்சந்தை பாதிக்கும் சூழல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது.  மேலும், கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதுபோன்ற சூழ்நிலைகளிலும் இன்று பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.


ரூபாய் மதிப்பு:






இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 21 காசுகள் அதிகரித்து 81.72 ரூபாயாக ஆக உள்ளது.