Share Market Closing Bell :வெள்ளிக்கிழமையான இன்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன.
வர்த்தக நேர முடிவில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 461.22 புள்ளிகள் அல்லது 0.75% சரிந்து61,337.81 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 145.90 புள்ளிகள் அல்லது 0.79% சரிந்து 18,269.00 புள்ளிகள் வர்த்தகமாகின. இந்நிலையில், பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தன.
லாபம்- நஷ்டம்:
டாடா ,மோட்டர்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, டாடா ஸ்டீல், ஜெ.எஸ்.டபுள்யூ. ஹெச்.யூ.எல். ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
டாக்டர். ரெட்டி லேப்ஸ், எம். அண்ட். எம்., அதானி போர்ட்ஸ், பி.பி.சி. எல்., பாரத ஸ்டேட் வங்கி, டி.சி.எஸ்., பஜார்ஜ் ஆட்டோ, கிரேசிம், அப்பல்லோ மருத்துவமனை, ஹீரோ மோட்டர்கார்ப், டைட்டன், அதானி எண்டெர்பிரைஸ், கோல் இந்தியா, பவர்கிர்ட், விப்ரோ, ஹெச்.சில்.எல். டெக், அல்ட்ராடெக் சிமெண்ட், கோடாக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், சிப்ளா, ஐ.டி.சி.,சன் பார்மா, பிரிட்டானியா, பாரதி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டெக் மஹிந்திரா, லார்சன், ஓன்.என்.ஜி.சி. ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் வர்த்தகமாகின.
உலக அளவில் நிலவும் பொருளாதார நிலையற்ற தன்மை இந்திய பங்குச்சந்தைகளை பாதித்துள்ளது.