உலகளவில் நிலவி வரும் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால், அமெரிக்க மத்திய வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள், தங்களது வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் இன்றய நாள் முடிவில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 878.88 புள்ளிகள் சரிந்து 61,799.03 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 245.40 புள்ளிகள் சரிந்து 18,419.90 புள்ளிகளாக உள்ளது. 


லாபம்- நஷ்டம்:


50 நிறுவனங்களை கொண்ட நிஃப்டி-50ல், 43 நிறுவனங்கள் சரிவுடனும்,  7 நிறுவனங்கள் ஏற்றத்துடனும் முடிவடைந்தன. குறிப்பாக ஐ.டி நிறுவனங்கள் பெரும் சரிவை கண்டன. 


அதானி போர்ட்ஸ், அப்போலோ மருத்துவமனை, ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபினான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, கோல் இந்தியா, விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், கோடாக் மகேந்திரா, டிசிஎஸ், லார்சன், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.


சன் பார்மா, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எண்டிபிசி, எம்.&எம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஏற்றத்துடன் முடிவடைந்தன.