Share Market Today: ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை! ஆட்டோமொபைல், வங்கி துறைகள் ஏற்றம்!

Share Market Today: இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக சரிவுடன் வர்த்தகமானது.

Continues below advertisement

இந்திய பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமானது. தொடர்ந்து நான்காவது செசனாக பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

Continues below advertisement

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 175.00 அல்லது 0.22% புள்ளிகள் சரிந்து 80,828.93 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 48.65 அல்லது 0.20% புள்ளிகள் சரிந்து 24,705.30 ஆகவும் வர்த்தகமாகியது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை சரிவுடன் காணப்பட்டது. 

நண்பகல் 12 மணி நிலவரப்படி, இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 39.76 அல்லது 0.078% புள்ளிகள் உயர்ந்து 81,071.03 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 28.30 அல்லது 0.12% புள்ளிகள் உயர்ந்து 24,780.75 ஆகவும் வர்த்தகமாகியது.

வர்த்தக நேர தொடக்கத்தில் காலை 10.50 மணிக்கு சென்செக்ஸ் 111 புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 18 புள்ளிகள் குறைந்தும் வர்த்தகத்தை தொடங்கியது. 

சென்செக்ஸ் பொறுத்தவரை இன்ஃபோசிஸ், ஐ.டி.சி., நெஸ்லே, டெக் மஹெந்திரா, ஹெச்.சி.எல். சரிவுடனும், ஆக்ஸிஸ் வங்கி, டாடா மோட்டர்ஸ், என்.டி.பி.சி., டாடா ஸ்டீல், சன் ஃபார்மா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்டவை ஏற்றத்தில் இருந்தன. பி.எஸ்.இ. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் 0.5 - 1 சதவீதம் வரை சரிந்தது. 

வங்கி துறையை தவிர, மற்ற எல்லா துறைகளும் சரிவுடனே இருந்தன. எண்ணெய், கேஸ், உள்ளிட்டவை `1-2 சதவீதம் குறைந்தது. சர்வதேச சந்தையிலும் ஏற்ற, இறக்கத்துடன் பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. சியோல் பங்குச்சந்தை சரிவுடனும், டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் உள்ளிட்ட பங்குச்சந்தை ஏற்றத்துடனும் வர்த்தகமாகின. 

இந்திய ரூபாய் மதிப்பு:

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 1 பைசா குறைந்து 84.07 ஆக இருந்தது. அமெரிக்க டாலர் மதிப்பு குறைவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவற்றின் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகின்றன. 

லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:

ஆக்ஸிஸ் வங்கி, விப்ரோ, ஈச்சர் மோட்டர்ஸ், டாடா மோட்டர்ஸ்,ஹிண்டால்கோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டாடா ஸ்டீல், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், என்.டி.பி.சி.,சன் ஃபார்மா, க்ரேசியம், அல்ட்ராடெக் சிமெண்ட், ஸ்ரீராம் ஃபினான்ஸ், அதானி போர்ட்ஸ், பவர்கிரிட் கார்ப்ரேசன், அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டி.சி.எஸ்., டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், லார்சன், பாரத் எலக்ட்ரிக்கல்ஸ், கோல் இந்தியா, ஹீரோ மோட்டர்கார்ப், கோடாக் மஹிந்திரா, அப்பல்லோ மருத்துவமனை, ஓ.என்.ஜி.சி., பஜாஜ் ஃபினான்ஸ், டிரெண்ட், எஸ்.பி,.ஐ. லைஃப் இன்சுரா, அதானி எண்டர்பிரைசிஸ், பாரதி ஏர்டெல்,ம் எஸ்.பி.ஐ. ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 

இன்ஃபோசிஸ், ஐ.டி.சி., நெஸ்லே, பிரிட்டானியா, பி.பி.சி.எல்., சிப்ளா. ஹெச்.சொ.எல். டெக், டாடா கான்ஸ் ப்ராட், ஹெச்.யு.எல்., டெக் மஹிந்திரா, எம்&எம், மாருதி சுசூகி, இந்தஸ்லேண்டு வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஹெச்.டி,எஃப்.சி. வங்கி, பாரதி ஏர்டெல்  ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.


 

Continues below advertisement
Sponsored Links by Taboola