கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் சிறியளவில் சரிவு ஏற்பட்டது. அன்று சென்செக்ஸ் 708 புள்ளிகள் சரிந்தது. அதன்படி வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 59,276 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. அதேபோல் நிஃப்டி 17,670 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குசந்தையில் நல்ல ஏற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1400 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அத்துடன் நிஃப்டியும் 18000 புள்ளிகளை கடந்துள்ளது. 


தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 1400 புள்ளிகள் உயர்ந்துள்ளது. தற்போது சென்செக்ஸ் 60,400 புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதேபோல் நிஃப்டி 18000 புள்ளிகளை கடந்து இருக்கிறது. இதற்கு இன்று காலை வெளியான ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவற்றின் இணைப்பு தகவல் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பிற்கு பிறகு ஹெச்டிஎஃப்சியின் பங்குகள் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் அதிகளவில் உயர்ந்துள்ளது. 


 






அதன்படி ஹெச்டிஎஃப்சியின் பங்குகள் 169 புள்ளிகளும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் 370 புள்ளிகளுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. இவை தவிர பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, கோடக் மஹிந்திரா, ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவற்றின் பங்குகளும் உயர்ந்துள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 75.71 ரூபாயாக இருக்கிறது. புதிய நிதியாண்டின் முதல் நாளில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரளவு சிரத்தன்மையுடன் தொடங்கியுள்ளது. 


குறிப்பாக இந்த ஹெச்.டிஎஃப்சி மற்றும் ஹெச்.டிஎஃப்சி வங்கி இணைப்பு காரணமாக முதலீட்டார்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பலரின் முதலீடுகளுக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளது. இதன்காரணமாக வாரத்தின் முதல் நாளிலேயே பலரும் மகிழ்ச்சியாக உள்ளனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண