கடந்த வாரம், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதையடுத்து, பெரும் சரிவை கண்டுவந்த மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை இன்றும் மீண்டும் ஏற்றம் கண்டது.


இந்நிலையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 362.24 புள்ளிகள் அதிகரித்து 61,312.60 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி-50, 104.55 புள்ளிகள் அதிகரித்து 18,221.70 புள்ளிகளாக உள்ளது.






தாக்கம்:


உலகளவில் பணவீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக, அமெரிக்க மத்திய வங்கி, சில தினங்களுக்கு முன்பு முடிவு எடுத்தது. இதையடுத்து 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 4 சதவீதமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்திய பங்குச் சந்தை கடந்த வாரத்தில் சரிவை கண்டன. 


அதையடுத்து பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, ரிசர்வ் வங்கி ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இந்நிலையில், இந்திய பங்குச் சந்தை ஏற்றம் காணும் சூழல் நிலவி வருகிறது.


நிறுவனங்கள்:


இன்று பங்கு சந்தை தொடங்கிய ஆரம்பத்தில் அதானி போர்ட்ஸ், நெஸ்ட்லே, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


பாரதி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டன.


ரூபாய் மதிப்பு:


தற்போது சீனாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கச்சா எண்ணெய் தேவையானது உலகளவில் குறைய வாய்ப்புள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை குறையும் சூழல் உள்ளது. 






இந்நிலையில், அமெரிக்கு டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 22 காசுகள் அதிகரித்து 82.13 ஆக உள்ளது.


Also Read: Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!