Share Market Today : இன்றைய நாள் முடிவில் இந்திய பங்கு சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 285.97 அல்லது 0.49% புள்ளிகள் குறைந்து 57,928.62 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 81.80 அல்லது 0.50% புள்ளிகள் குறைந்து 17,070.10 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
லாபம்-நஷ்டம்
ஹின்டல்கோ, மாருதி சுசிகி, நெஸ்டீலே, ஓஎன்ஜிசி, ஐடிசி, டாடா மோட்டடார்ஸ், சிப்ளா, சன் பார்மா, எஸ்பிஐ, டைட்டன் கம்பெணி, ஹிரோ மோட்டோ கோர்ப், அல்ட்ரா டெக் சிமெண்ட், என்டிபிசி, டாடா ஸ்டீல், எம்எம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
பஜாஜ் ஆட்டோ, கோடக் மகேந்திரா, எச்சிஎல் டெக், விப்ரோ, ரிலையன்ஸ், பிபிசிஎல், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, லார்சன், கோல் இந்தியா, டிசிஎஸ், பிரிட்டானியா, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின்பங்குகள் சரிவை கண்டுள்ளன.
கடந்த சில நாட்களாவே இந்திய பங்குச்சந்தையானது சரிவுடன் காணப்பட்டு வருகிறது. நேற்றைய வர்த்தக முடிவில் பங்குச்சந்தை 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. அதேபோன்று இன்றைய வர்த்தக முடிவிலும் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது முதலீட்டாளர்களை கவலை அடைய வைத்துள்ளது.