Share Market : இந்திய பங்குச்சந்தையானது இன்று காலை ஏற்றத்தில் தொடங்கியுள்ளது
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 107.28 புள்ளிகள் உயர்ந்து 60,763 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 37.25 புள்ளிகள் உயர்ந்து 18,090.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத்தின் மூன்றாவது நாட்களாக இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லாபம்- நஷ்டம்
டாடா ஸ்டீல், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி, ஹின்டல்கோ, யுபிஎல், எச்சிஎல் டெக், கிராசிம், ஓன்ஜிசி, பாரதி ஏர்டெல், டெட்டன் கம்பெணி, லார்சன், விப்ரோ, கோடக் மகேந்திரா, சன் பார்மா, ரிலையன்ஸ், பிரிட்டானியா, நெஸ்டீலே, பஜாஜ் பின்சர்வ், கோல் இந்தியா, அதாணி போர்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசிகி, ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
சிப்ளா, எம்எம், அதாணி எட்டர்பிரிஸ், ஐசிஐசிஐ வங்கி, பிபிசிஎல், டாடா மோட்டார்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்சிஸ் வங்கி, டாடா கான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
கடந்த மூன்று நாட்களாக இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் இருந்து வருகிறது. உள்நாட்டில் டிசம்பர் மாத சில்லறை பணவீக்கம் குறைந்தது உள்ளிட்டவைகள் முதலீட்டாளர்களை நம்பிக்கையை ஏற்படுத்தியது. மேலும், ஆய்வறிக்கையில் 2023ஆம் ஆண்டில் பொருளாதார மந்தநிலை வரும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் இந்தியாவில் எந்தவிதத்திலும் தற்போது வரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சீனாவின் கடைசி காலாண்டு பொருளாதார வளர்ச்சி 50 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்து 2.9 சதவீதமாக சரிந்த தகவலும் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் குறைந்து 81.80 ரூபாயாக உள்ளது.