- Share Market : இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், 112.88 அல்லது 0.19 % புள்ளிகள் உயர்ந்து 60,205.85 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 33.15 அல்லது 0.25% புள்ளிகள் உயர்ந்து 17,940.40 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
லாபம்-நஷ்டம்
ஹெச்.சி.எல்., டெக், லார்சன், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ, ஹெச்.டி.எஃப்.சி., ரிலையன்ஸ், கோடாக் மகிந்திரா வங்கி, ஏசியன் பேயிண்ட்ஸ், டி.சி.எஸ்., பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ. லைப் இன்சுரா, டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தமாகி வருகின்றன.
டாடா கன்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், பஜார்ஜ் ஃபினான்ஸ், சன் பார்மா, எம்&எம், ஹிண்டால்கோ, அதானி எண்டர்பிரைசஸ், டாடா ஸ்டீல், சிப்லா, டைட்டன் கம்பேனி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, திவிஸ் லேப், பிரிட்டானியா, பவர் கிரிட் கார்பரேசன், அதானி போர்டஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.