இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 101.30 புள்ளிகள் சரிந்து 62,171 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 24.20 புள்ளிகள் சரிந்து 18,459 புள்ளிகளாக உள்ளது. 






லாபம் - நஷ்டம்


 விப்ரோ, ஆக்சிஸ் வங்கி, லார்சன், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.   


அதானி போர்ட்ஸ், ,பஜாஜ் ஃபினான்ஸ், நெஸ்ட்லே, டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.


மேலும் சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை குறையும் சூழல் நிலவுகிறது.


ரூபாய் மதிப்பு:






இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 3 காசுகள் அதிகரித்து 81.67 ரூபாயாக ஆக உள்ளது.