இன்றைய வர்த்தகம் தொடங்கிய நிலையில், நாளின் தொடக்கத்திலேயே ஆசிய பங்குச்சந்தையில் பங்குகள் வீழ்ச்சியுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 238.20 அல்லது 0.44% புள்ளிகள் சரிந்து 53,510. 79 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி 98.15 அல்லது 0.61% புள்ளிகள் குறைந்து 15,927.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தகத்தில், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி, வாகனம் , ஆட்டோமொபைல்,FMCG, உலோகங்கள் உள்ளிட்ட துறைகளின் நிறுவனப் பங்குளின் மதிப்பு சரிவுடன் வர்த்தகமாகின்றன.
இன்று காலையில் இருந்தே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஏசியா பெயிண்ட்ஸ், ஐ.டி,சி, எல். அண் டி, கோடாக் மஹிந்திரா வங்கி, பஜார்ஜ் ஃபின்கார்ப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின. பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரத்திற்கு பின், வங்கிகளின் பங்கு மதிப்பு உயரத்தொடங்கியது.
கோல் இந்தியாவின் பங்குகளின் மதிப்பு உயர்ந்து வர்த்தகமாகியது. இன்றைய நிலவரப்படி, 748 பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. 2260 பங்குகள் வீழ்ச்சியடைந்தது. 97 பங்குகள் எவ்வித மாற்றமும் இன்றி வர்த்தகமாகி வருகிறது. ஹெ.டி.எஃப்.சி., இன்ஃபோசிஸ், ஐ.சி.சி.ஐ. உள்ளிட்டவைகளின் பங்குகளின் மதிப்பு உயர்ந்தது