Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 235.05% அல்லது 0.39 % புள்ளிகள் அதிகரித்து 60,392.77 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 90.10 % அல்லது 0.51% புள்ளிகள் உயர்ந்து 17,812.50 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
பவர்கிரிட் கார்ப், என்.டி.பி.சி., நெஸ்லே,ஓ.என்.ஜி.சி., அல்ட்ராடெக், ஹெச்.யு.எல்., எஸ்.பி.ஐ.,ஐ.டி.சி.,லார்சன், பி.பி.சி.எல்., மாருது சுசூகி, பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் வங்கி,பிரிட்டானியா, கோடாக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்ஸ்சர்வ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
டேவிஸ் லேப்ஸ், பஜார்ஜ் ஆட்டோ, அதானி எண்டர்பிரைசர்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், கோல் இந்தியா,இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்.டி.எப்.சி. வங்கி, சிப்ளா, அப்பல்லோ மருத்துவமனை, டெக் மஹிந்திரா, ஐ.சி.சி.ஐ. வங்கி, ஜெ.எஸ்.டபுள்யு., அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ், பஜார்ஜ் ஃபினான்ஸ்உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
இந்திய ரூபாய் மதிப்பு:
அமெரிக்க டாலருகு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.09 ஆக இருந்தது. இது காலை நிலவரத்தை விட, 3 பைசா உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க..
மீண்டும் கொரோனா தொற்று பாதிப்புகள் உயர 3 காரணங்கள்: இந்திய மருத்துவ சங்கம் கூறுவது இதுதான்!
Red Chilli Price: உச்சம் தொட்ட மிளகாய் விலை; கடந்த ஆண்டை விட 10-15% மளிகை பொருட்களின் விலை உயர்வு