இன்றைய நாளில் ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தை முடிவில் சரிவுடன் முடிவடைந்தது.


இந்நிலையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 220.86 புள்ளிகள்  சரிந்து 60,286.04 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 43.10 புள்ளிகள்  சரிந்து 17,721.50 புள்ளிகளாகவும் வர்த்தகமானது. 


இன்றைய நாள் தொடக்கத்தில் மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 76.15 அல்லது  0.11 % புள்ளிகள் உயர்ந்து 60,583.05 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 29.20 அல்லது 0.11% புள்ளிகள் உயர்ந்து 17,793.80 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.  






வாரத்தின் முதல் நாளான நேந்று இந்திய பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது முதலீட்டாளார்களை கவலையில் ஆழ்த்தியது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை சரிந்தது. இன்று மீண்டும் சரிவுடன் பங்கு சந்தை மீண்டும் முடிவடைந்தது முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது


லாபம் - நஷ்டம்:


அதானி போர்ட்ஸ், எஸ்.பி.ஐ , எச்சிடிஎஃப்சி, பஜாஜ் பின்சர்வ், டிசிஎஸ்,  லார்சன், கோடக் மகேந்திரா, பிபிசிஎல், கோல் இந்தியா, கிராசிம், ஓஎன்ஜிசி,  உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


விப்ரோ, என்டிபிசி, பாரதி ஏர்டெல்,  ரிலையன்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், பிரிட்டானியா,  டாடா ஸ்டீல், ஹின்டல்கோ, ஐடிசி, மாருதி சுசுகி, ஹீரோ மோட்டோகார்ப், அப்போலோ மருத்துவமனை, டாடா  மோட்டார்ஸ், சன் பார்மா, யுபிஎல், டைட்டன் கம்பெனி, டெக் மகேந்திரா, டாடா கார்ஸ், எம்எம், சிப்ளா, பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, கிராசிம், எச்சிஎல் டெக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன


இந்திய ரிசர்வ் வங்கியானது, பணவீக்கம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க இன்று இரண்டாவது நாளாக ( பிப்.6 முதல் பிப். 8 ) இக்கூட்டம் நடைபெறுகிறது.


மூன்று நாட்கள் நடைபெறும் கூட்டத்தில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 அடிப்படை புள்ளிகள்  உயர்த்த வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள், வங்கியில் வீட்டு கடன் , வாகன கடன் வாங்கியோருக்கு இ.எம்.ஐ செலுத்தும் தொகையானது அதிகரிக்கக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் இந்த ரிசர்வ் வங்கி கூட்டமும், இந்திய பங்கு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


ரூபாயின் மதிப்பு:






இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து  82.66 ரூபாயாக உள்ளது.