இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 602.75 அல்லது 0.76% புள்ளிகள் உயர்ந்து 80,005.04 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 158.35 அல்லது 0.65% புள்ளிகள் உயர்ந்து 24,339.15 ஆகவும் வர்த்தகமாகியது.
உலக அளவில் சந்தை பொருளாதாரத்தில் நிலவும் நிலையின்மையால் கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகிவருகிறது. இந்நிலையில், இந்த வார தொடக்கத்தில் பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பங்குச்சந்தை நிபுணர் தெரிவிக்கையில்,” தொடர்ந்து ஐந்து நாட்களாக பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றின் காலாண்டு வளர்ச்சி வலிமையாக இருந்ததால் அதன் தாக்கம் பங்குச்சந்தையில் உள்ளது. இதனால் பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது. இருப்பினும், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்த பங்குகளை விற்பனை செய்து வருவதால் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.”எனத் தெரிவித்தார்.
பொது துறை வங்கி உள்பட எல்லா துறைகளும் ஏற்றத்துடன் தொடங்கி நிறைவடைந்தன. பொதுத் துறை வங்கி இண்டெக்ஸ் 3.8 சதவீதம் உயர்ந்தது. ஃபார்மா, மீடியா, 1 சதவீதம் உயர்ந்தது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:
ஸ்ரீராம் ஃபினான்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ், விப்ரோ, அதானி போர்ட்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு., டாடா ஸ்டீல், சன் ஃபார்மா, எம்&எம், ஹிண்டால்கோ, டாடா மோட்டர்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்.பி.ஐ., பஜாஜ் ஃபின்சர்வ், பி.பி.சி.எல், இந்தஸ்லேண்ட் வங்கி, என்.டி.பி.சி., ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், க்ரேசியம், பிரிட்டானியா, டி.சி.எஸ்., பவர் கிரிட் கார்ப்ரேசன், டைட்டன் கம்பெனி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், நெஸ்லே, ரிலையன்ஸ், லார்சன், ஐ.டி.சி., டாடா கான்ஸ் ப்ராட், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபினான்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது.
கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஆக்ஸிஸ் வங்கி, கோடாக் மஹிந்திரா, ஹீரோ மோட்டர்கார்ப், பாஅத் எலக்ட்ரிக்கல், டெக் மஹிந்திரா, ட்ரண்ட், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஹெச்.டி. எஃப்.சி., வங்கி, அப்பல்லோ மருத்துவமனை, ஓ.என்.ஜி.சி., மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.