தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கத்தின் விலையானது கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் எதிர்பாராத உச்சத்தை தொட்டுள்ளது.  அந்த வகையில் கடந்த 2020ஆம் வருடம் ஒரு சவரன் 30 முதல் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலையானது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

Continues below advertisement

2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் தங்க நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு சவரன் 1லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இந்தாண்டு இறுதிக்குள் 2 லட்சத்தை தாண்ட வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். 

தங்கம் விலை நிலவரம்

  • மே 28-ம் தேதி கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து 14,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து 1,16,000 ரூபாய்க்கு விற்பனை.
  • மே 29-ஆம் தேதி கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து 14,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து 1,16,800 ரூபாய்க்கும் விற்பனை
  • மே 30- ஆம் தேதி கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14,630 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,17,040 ரூபாய்க்கு விற்பனை
  • மே 31- ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை
  • ஜூன் 1- ஆம் தேதி- கிராம் ஒன்றுக்கு 130 ரூபாய் குறைந்து 14,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து 1,16,040 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது நேற்று சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான கிராம் ஒன்று 14,500 ரூபாய்க்கும், சவரன்1,16,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Continues below advertisement

இதே போல வெள்ளி விலையும் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.