கடந்த 3 நாட்களாக தொடர் சரிவைக் கண்டு வந்த ரூபாயின் மதிப்பு தற்போது உயர்ந்திருக்கிறது. இந்த திடீர் எழுச்சிக்கு ஏற்றுமதியாளர்கள் மத்தியில் டாலருக்கான தேவை குறைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் 72 ரூபாய் 51 பைசவாக இருந்த ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக 73 ரூபாய் 33 பைசாவாகவும் குறைந்தபட்சமாக 72 ரூபாய் 53 பைசா வரையிலும் சென்றது.


கடந்த வியாழக்கிழமை 72 ரூபாய் 62 காசுகளாக இருந்த டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு, நேற்று 72 ரூபாய் 51 பைசாவாக உயர்ந்தது.  மூலதனச் சந்தையில் கடந்த வியாழக்கிழமை அந்நிய முதலீட்டாளர்கள் ரூ. 3,382.60 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதுபோல கச்சா எண்ணெயின் விலையும் பேரல் ஒன்றுக்கு 2.10 சதவீதம் உயர்ந்து 63.25 டாலர்களாக அதிகரித்துள்ளது.