PVR Popcorn Sales : பேசாம கடைய போட்ரலாமா? பாப்கார்ன் விற்பனையில் ரூ.1900 கோடி சம்பாதித்த பிவிஆர் சினிமாஸ்

PVR Popcorn : 2023 ஆம் ஆண்டில் மட்டுல் பாப்கார்ன் மட்டும் குளிர்பானங்கள் விற்பனையில் 1900 கோடி சம்பாதித்துள்ளது பிவிஆர் திரையரங்க நிறுவனம்

Continues below advertisement

PVR Popcorn : பிவிஆர் நிறுவனத்திற்கு சொந்தமான திரையரங்குகளில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை 70 ரூபாய். குடிப்பதற்காக இலவசமாக தண்ணீர் வைக்க வேண்டும் என்கிற பொதுவிதி இருக்கிறது. ஆனால் அந்த தண்ணீரை நீங்கள் திரையரங்கத்தைச் சுற்றி ஒரு மூலையில் தான் கண்டுபிடிக்க முடியும். டிக்கெட் விலை 200 ரூபாய் என்றால் ஒரு ரெகுலர் பாப்கார்னின் விலை 250 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. திரையரங்குகள் டிக்கெட் விற்பனைகளைக் காட்டிலும் தங்கள் உணவுப் பொருட்களின் விற்பனைகளையே முதன்மையாக சார்ந்திருக்கின்றன.

Continues below advertisement

ஒரு டிக்கெட்டின் விலை 100 ரூபாய் என்றால் அதில் முதல் வாரத்தில் 70 சதவீதம் தயாரிப்பாளருக்கும் 30 சதவீதம் திரையரங்க உரிமையாளர்களுக்கும் சேர்கிறது. இதனால் தான் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் விலை பலமடங்கு அதிகமாக இருக்கிறது.

2023 ஆம் ஆண்டு பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் மற்றும் உணவுப் பொருட்களின் விற்பனை குறித்த தகவலை Money Control என்கிற தளம் வெளியிட்டுள்ளது.

உணவு விற்பனையில் ரூ.1900 கோடி 

இந்த தகவலின் படி பிவிஆர் நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் பாப்கார்ன், குளிர்பானங்கள் மற்றும் இதர உணவுப் பண்டங்களின் விற்பனையால் மட்டும் 1958.4 கோடி சம்பாதித்து உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் 1618 கோடி சம்பாதித்ததைக் காட்டிலும் 21 சதவீதம் அதிக லாபத்தை ஈட்டியுள்ளது பிவிஆர். அதே நேரம் டிக்கெட் விற்பனையைப் பொறுத்தவரையில் கடந்த 2022 ஆண்டு 2751. 4 கோடி விற்பனை செய்த நிலையில் இந்த ஆண்டு அதை விட 19 சதவீதம் அதிகரித்து 3279.9 கோடிக்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளது.

உணவுப் பொருட்களில் இவ்வளவு பெரிய லாபத்திற்கு ஒரு சில காரணனிகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக கடந்த ஆண்டு பெரிய பட்ஜெட்டில் வெளியான படங்கள் மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றன. மேலும் பிவிஆர் நிறுவனத்தைப் பொறுத்தவரை மெட்ரோ நகரங்களை கடந்து சின்ன சின்ன நகரங்களிலும் அது பிவிஆர்-க்கு சொந்தமான திரையரங்குகள் நிறுவப்பட்டிருக்கின்றன.

இதில் ஒரு சில இடங்களில் மக்கள் படம் பார்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லாமல் உணவை மட்டும் சாப்பிடும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது இன்னொரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

உணவு பண்டங்கள் விற்பனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் டெலிவரி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது பிவிஆர்.

மேலும் பெருநகரங்களில் வணிக வளாகங்களில் தனியாக உணவு விடுதிகளை அமைக்கும் திட்டத்தையும் முன்னெடுக்க இருக்கிறது.

Continues below advertisement