தங்கம் விலை நிலவரம்
- ஜூன் 23 ஆம் தேதி கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 13,560 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 108,440 ரூபாய்க்கு விற்பனை.
- ஜூன் 24 ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 210 ரூபாய் குறைந்து 13,350 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,680 ரூபாய் சரிந்து 1,06,800 ரூபாய்க்கு விற்பனை.
- ஜூன் 25 ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 210 ரூபாய் குறைந்து 13,140 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,680 ரூபாய் குறைந்து 1,05,120 ரூபாய்க்கு விற்பனை.
இன்றைய தங்கம் விலை என்ன.?
தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 3,680 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது திடீரென அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து 13,220 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 1,05,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதே போல வெள்ளி விலையானது கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 235 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் உயர்ந்து 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
