உச்சத்தை தொடும் தங்கம் விலை
- ஆகஸ்ட் 17-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 1,14,160 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 18-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 14,290 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1,14,320 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 19 -ம் தேதி காலையில் ஒரு சவரன் 1,13,640 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், மாலையில், சவரனுக்கு 1,560 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன், 1,15,200 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 20 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 200 ரூபாய் உயர்ந்து 14,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து 1,16,800 ரூபாய்க்கு விற்பனை.
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்த நகைப்பிரியர்கள் கவலை அடைய செய்துள்ளது. இந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 110 ரூபாய் உயர்ந்து 14,710 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து 1,17,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே இன்று மாலை மீண்டும் தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் உயர்ந்து 14850 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து 1,18,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையானது இன்று காலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாலையில் மீண்டும் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 270 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
