தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கத்தின் விலையானது உயர்ந்தாலும் நகைக்கடைகளில் தங்க நகைகளை வாங்க மக்களின் கூட்டமானது எப்போதும் அலைமோதியே காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது வரலாற்றில் இல்லாத வகையில் 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி தலை சுற்ற வைத்தது. இருந்த போதும் இந்திய மக்கள் தங்கத்தின் மீதாக அபரிமிதமான ஈர்ப்பு காரணமாக தங்க நகைகளை வாங்கி வருகிறார்கள். குறிப்பாக இந்திய திருமணங்களில் தங்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதால் தங்க நகைகளை மக்கள் வாங்கி வருகிறார்கள். 

Continues below advertisement

அமெரிக்கா- ஈரான் போர்

இதனிடையே தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கம் விலையானது சற்று குறைய தொடங்கியது. அந்த வகையில் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே இது தான் நல்ல சான்ஸ் என நினைத்த முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டை செலுத்தியதால் தங்கம் விலையானது குறைய தொடங்கியது.  இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்திற்கு விற்பனையான தங்கம் விலை அடுத்த சில மாதங்களில் ஒரு சவரன் 1 லட்சத்தை எட்டியது. தற்போது 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

  • ஜூலை 25 ஆம் தேதிகிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 1,6,400 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 26 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை.
  • ஜூலை 27 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,370 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 1,06,960 ரூபாய்க்கு விற்பனை.
  • ஜூலை 28 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு ரூ.155 குறைந்து 13,215 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,720-க்கு விற்பனை.
  • ஜூலை 29 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் குறைந்து 13,155 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,05,240 ரூபாய்க்கு விற்பனை.

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1720 ரூபாய் குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. அந்த வகையில், கிராம் ஒன்றுக்கு 75 ரூபாய் அதிகரித்து 13,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து 1,05,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Continues below advertisement

அதே நேரம் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி கிராம் 235 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.