ஏறி இறங்கும் தங்கம் விலை

ஆகஸ்ட் 10ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 111,600 ரூபாய்க்கு விற்பனை.ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலையில் அதிகரித்த தங்கம் விலை, மாலையில் குறைந்தது. அந்த வகையில், ஒரு கிராம் 14,150 ரூபாய்க்கும், சவரன் 1,13,200 ரூபாய்க்கும் விற்பனை.ஆகஸ்ட் 12 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை.ஆகஸ்ட் 13 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 14,220 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1,13,760 ரூபாய்க்கு விற்பனை 

Continues below advertisement

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று குறைந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 180 ரூபாய் குறைந்து 14,040 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் குறைந்து 2லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

Continues below advertisement