சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து அதே விலையில் விற்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 72ஆவது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் சென்னையில் இன்று விற்கப்படுகிறது. உலக பொருளாதாரம் தொடர்ந்து மீட்சி பெற்று வருவதால்  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சற்றே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மிக விரைவில்  ஏற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


2021 நவம்பர் மாத தொடக்கத்தில் 80 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை, மாத இறுதியில் 70.86 அமெரிக்க டாலராக குறைந்தது. மேலும், அமெரிக்கா போன்ற நாடுகளின் நிர்பந்தத்தால் ஒபெக்+ எனப்படும் ரஷ்யா உள்ளிட்ட பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு உற்பத்தி கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்துள்ளதால், கச்சா எண்ணெய் விலையை சரியத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போதைய, ஒமிக்ரான் தொற்று பரவலில் முழுமையான எல்லை மூடலை எந்த நாடும் அறிவிக்கவில்லை. இதன்காரணமாக, தற்போது கச்சா எண்ணையின் நுகர்வு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சற்றே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.




கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதில் குறிப்பாக கச்சா எண்ணெய் தேவை மீட்சி அங்கு காணப்படுகிறது. இதன், காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் கணிசமாக அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.  பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் கச்சா எண்ணெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் 70 டாலர் அளவுக்கு இருக்கிறது. ஆனால் அடுத்த ஆண்டில் ஒரு பேரல் 100 டாலரை கச்சா எண்ணெய் தொடும். 2023-ம் ஆண்டிலும் தேவை உயர்ந்து கச்சா எண்ணெயின் உயர்ந்தே இருக்கும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்திருக்கிறது.


தற்போது கச்சா எண்ணெயின் தேவை அதிகமாக இருக்கிறது. வரும் காலத்தில் இன்னும் தேவை அதிகரிக்கும். விமான போக்குவரத்து நாளுக்கு நாள் உயரும். கோவிட்டின் புதிய உருமாற்றமான ஒமிக்ரான் பரவினாலும் சர்வதேச அளவில் தேவை குறையாது. ஒரு வேளை லாக்டவுன் அறிவிக்கப்பட்டாலும் கூட குறிப்பிட்ட பிராந்தியத்தில் பகுதி பகுதியாகதான் லாக்டவுன் இருக்கும். அதனால் கச்சா எண்ணெய்க்கான தேவை குறையாது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண