Small Cap Mutual Funds: மியூட்சுவல் ஃபண்டில் கடந்த ஒரு வருடத்தில் அதிக வருவாயை தந்த, டாப் 5 பங்குகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


மியூட்சுவல் ஃபண்ட்:


இந்தியாவில் பொதுவான முதலீட்டாளர்கள் இப்போது மியூட்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன.  சந்தையின் மிகப்பெரிய ஆபத்து இருந்தபோதிலும், மக்கள் அதிகப்படியான வருமானத்திற்காக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள். அந்த வகையில், கடந்த 1 வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு 70 சதவிகிதம் வரை அபரிமிதமான வருவாயைக் கொடுத்த அந்த 5 ஸ்மால் கேப் ஃபண்டுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


1. கோடக் ஸ்மால் கேப் ஃபண்ட்:


கோடக் ஸ்மால் கேப் ஃபண்ட் தனது முதலீட்டாளர்களுக்கு எஸ்ஐபி மூலம் கடந்த ஒரு வருடத்தில் 50.25 சதவிகித வருமானத்தை அளித்துள்ளது. கோடக் ஸ்மால் கேப் ஃபண்டின் தற்போதைய நிதி அளவு சுமார் ரூ.17,639 கோடி ஆகும்.


2.மஹிந்திரா மேனுலைஃப் ஸ்மால் கேப் ஃபண்ட்:


மஹிந்திரா மேனுலைஃப் ஸ்மால் கேப் ஃபண்ட் தனது முதலீட்டாளர்களுக்கு எஸ்ஐபி மூலம் கடந்த ஓராண்டில் 51.59 சதவிகித லாபத்தை அளித்துள்ளது. மஹிந்திரா மேனுலைஃப் ஸ்மால் கேப் ஃபண்டின் தற்போதைய நிதி அளவு சுமார் ரூ.5279 கோடி ஆகும்.


3. இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்:


இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் தனது முதலீட்டாளர்களுக்கு கடந்த ஒரு வருடத்தில் SIP மூலம் 53.15 சதவிகித வருமானத்தை அளித்துள்ளது. இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டின் தற்போதைய நிதி அளவு சுமார் ரூ.5093 கோடி.


டாடா ஸ்மால் கேப் ஃபண்ட்:


டாடா ஸ்மால் கேப் ஃபண்ட் தனது முதலீட்டாளர்களுக்கு எஸ்ஐபி மூலம் கடந்த ஓராண்டில் 55.10 சதவிகித வருமானத்தை அளித்துள்ளது. டாடா ஸ்மால் கேப் ஃபண்டின் தற்போதைய நிதி அளவு சுமார் ரூ.8878 கோடி ஆகும்.


பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட்:


பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட், SIP மூலம் முதலீட்டாளர்களுக்கு கடந்த ஒரு வருடத்தில் 70.24 சதவிகித வருமானத்தை அளித்துள்ளது. பந்தன் ஸ்மால் கேப் ஃபண்டின் தற்போதைய நிதி அளவு சுமார் ரூ.7534 கோடி ஆகும்.


பொறுப்பு துறப்பு: கடந்த சில நாட்களில் பங்குச் சந்தையில் பெரும் சரிவு காணப்படுகிறது. இந்திய பங்குச்சந்தையின் சரிவு செப்டம்பர் 20 அன்று தொடங்கி கடந்த அக்டோபர் 7ம் தேதி வரை தொடர்ந்தது. இந்த காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர். பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் உங்கள் மியூச்சுவல் ஃபண்டிலிருந்து நீங்கள் பெறும் வருவாயில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். குறிப்பிட்ட பங்கில் முதலீடு செய்வது என்பது உங்களது தனிப்பட்ட முடிவு மற்றும் விருப்பம் மட்டுமே ஆகும்.