ஜூன் 30 ஆம் தேதிக்கு முன் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) ஆதாருடன் இணைத்திருக்கவில்லை என்றால், அந்த பான் இப்போது செயலற்றதாகக் கருதப்படுகிறது. இதன் பொருள் உங்கள் நிதி நடவடிக்கைகள் மற்றும் வரிகளில் சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். உதாரணமாக, வங்கி நிலையான வைப்பு (FD) அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் உங்களால் முதலீடு செய்ய முடியாது, வருமான வரி ரிட்டன்களை (ITR) தாக்கல் செய்யவோ அல்லது வரியை திரும்பப் பெறவோ முடியாது. ஆனால், உங்கள் பான் எண் செயல்படவில்லை என்றாலும், நீங்கள் சில நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். ஆனால் அவற்றிற்கு TDS மற்றும் TCS தொகை அதிகமாக பிடிக்கப்படும். அதற்கு சில உதாரணங்கள் இங்கே:




  • ஒரு நிதியாண்டில் வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) அல்லது தொடர் வைப்புத்தொகை (RD) மூலம் ரூ.40,000க்கு மேல் சம்பாதித்தால் (மூத்த குடிமக்களுக்கு ரூ. 50,000க்கு மேல்) அதிக டிடிஎஸ் செலுத்த வேண்டி வரும்.

  • ஒரு நிதியாண்டில் 5,000 ரூபாய்க்கு மேல் நிறுவனங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளிடமிருந்து டிவிடெண்டுகளைப் பெற்றாலும் அதிக டிடிஎஸ் செலுத்த வேண்டி வரலாம்.

  • 50 லட்சத்திற்கு மேல் அசையாச் சொத்தை விற்றால், அதிக டிடிஎஸ் பெறுவீர்கள்.

  • 10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள கார் வாங்கினால் அதிக டி.சி.எஸ்.

  • வரி செலுத்த வேண்டியிருக்கும் போது உங்கள் EPF கணக்கில் இருந்து 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்தால் அதிக TDS பிடிக்கப்படும்.


தொடர்புடைய செய்திகள்: Rajinikanth: ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியா...சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே வம்பிழுத்த ப்ளூ சட்டை... முற்றுகையிட்ட ரசிகர்கள்!



  • மாத வாடகையாக 50,000 ரூபாய்க்கு மேல் செலுத்தினால், அதிக டிடிஎஸ் செலுத்த வேண்டும்.

  • 50 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு பொருட்களை விற்றாலோ, சேவைகளை செய்தாலோ அதிக டிடிஎஸ் செலுத்த வேண்டும்.

  • நீங்கள் ஒருவரை ஒப்பந்தத்திற்கு பணிக்கு அமர்த்தி, ஒரு ஒப்பந்தத்திற்கு ரூ. 30,000 அல்லது மொத்தமாக ரூ. 1 லட்சம் செலுத்தினால், அதிக டிடிஎஸ் செலுத்த வேண்டும்.

  • 15,000 ரூபாய்க்கு மேல் கமிஷன் பெறும்போது அதிக டிடிஎஸ் கொடுக்க வேண்டும்.



சட்டப்பிரிவுகள் சொல்வது என்ன?


வணிக ஆலோசனை நிறுவனமான RSM இந்தியாவின் நிறுவனர் சுரேஷ் சுரானா, 1961 வருமான வரிச் சட்டத்தின் 206AA மற்றும் 206CC பிரிவுகள் முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளன என்று எகனாமிக் டைம்ஸிடம் கூறியுள்ளார். சுரானாவின் கூற்றுப்படி, TDSக்கு உட்பட்ட பரிவர்த்தனைகளின் போது நீங்கள் பான் எண்ணை வழங்கவில்லை என்றால், 20% தொகையை வரியாகக் கழிக்க வேண்டிய வரும். மேலும், 206CC பிரிவு படி, பான் எண்ணை வழங்கவில்லை என்றால், அதிக TCS-உம் பொருந்தும் என்று கூறுகிறது. இது குறிப்பிட்ட விகிதத்தை விட இருமடங்கு அல்லது மொத்த தொகையில் 5% ஆக இருக்கலாம் (இரண்டில் எது அதிகமோ அது எடுத்துக்கொள்ளப்படும்).