தபால் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் வங்கி (India Post Payment Bank -IPPB) மூலம் அடிப்படை வங்கி பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ளலாம்.


IPPB மூலம் ஒருவர் தங்கள் பேலன்ஸை எளிதில் சரிபார்க்கலாம், பணத்தை மாற்றலாம். மேலும் இதன் மூலம் பிற நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதற்காக நீங்கள் தபால் நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தற்போது ஆன்லைனிலேயே இந்த திட்டங்களில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.


தொடர்ச்சியான வைப்பு (Recurring deposit -RD) பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund -PPF), சுகன்யா சமிர்தி கணக்கு (Sukanya Samriddhi Account -SSA) ஆகியவை தபால் அலுவலக சேமிப்பு வைப்புத் திட்டங்களில் சில முக்கிய திட்டங்களாகும்.


இந்த திட்டங்களில் IPPB, வாடிக்கையாளர்களை பரிவர்த்தனைகளை சீராக மேற்கொள்ள அனுமதிக்கிறது. சமீபத்தில், DakPay டிஜிட்டல் பேமெண்ட் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதை தபால் அலுவலகம் மற்றும் IPPB வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.


IPPB மூலம் உங்கள் தபால் அலுவலகம் சுகன்யா சம்ரிதி கணக்கில் பணத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள் இங்கே :



  1. உங்கள் வங்கி கணக்கிலிருந்து IPPB கணக்கில் பணத்தைச் சேர்க்க வேண்டும்.

  2. DOP தயாரிப்புகளுக்குச் செல்லவும். சுகன்யா சமிரதி கணக்கைத் தேர்வு செய்ய வேண்டும்.

  3. உங்கள் SSY கணக்கு எண்ணையும் பின்னர் DOPவாடிக்கையாளர் ஐடியையும் எழுத வேண்டும்.

  4. Instalment Duration மற்றும் Amount என்பதை தேர்வுசெய்ய அவெண்டும்.

  5. IPPB மொபைல் பயன்பாடு மூலம் வெற்றிகரமாக பணம் செலுத்துப்பட்டது என்ற உங்களுக்கு அறிவிப்பு வரும்.


IPPB மூலம் உங்கள் தபால் அலுவலக PPF கணக்கில் பணத்தை மாற்றுவதற்கான படிப்படியான வழிகாட்டி:



  1. உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து உங்கள் IPPB கணக்கில் பணத்தைச் சேர்க்கவும்.

  2. DOP சேவைகளுக்குச் செல்ல வேண்டும்.

  3. அங்கிருந்து நீங்கள் Recurring Deposit, Public Provident Fund, Sukanya Samridhi Account, Loan against Recurring Deposit போன்ற திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.

  4. உங்கள் PPF கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய விரும்பினால், Provident Fund என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

  5. உங்கள் பிபிஎஃப் கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை எழுதவும்.

  6. டெபாசிட் செய்ய வேண்டிய தொகையை குறிப்பிட்டு, ‘Pay’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

  7. IPPB மொபைல் பயன்பாடு மூலம் வெற்றிகரமாக பணம் செலுத்துப்பட்டது என்ற உங்களுக்கு அறிவிப்பு வரும்.


இந்தியா போஸ்ட் வழங்கிய பல்வேறு தபால் அலுவலக முதலீட்டு விருப்பங்களை நீங்கள் தேர்வுசெய்து IPPB அடிப்படை சேமிப்புக் கணக்கு மூலம் வழக்கமான பணம் செலுத்தலாம். பயன்பாட்டைப் பயன்படுத்தி பிற வங்கி கணக்குகளிலிருந்து IPPB-க்கு நிதியை மாற்றலாம்.