சமீபத்திய 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சுகாதார முன்னேற்றங்கள், மேம்பட்ட வாழ்க்கை நிலை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வு ஆகியவை உலகம் முழுவதும் ஆயுட்காலம் அதிகரிப்புக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றின. இந்தியாவில், சராசரி ஆயுட்காலம் 1960 களில் சுமார் 50 ஆண்டுகளில் இருந்து இன்று 70 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த போக்கு நேர்மறையான மாற்றத்தை பிரதிபலிக்கிறது. ஏனெனில், மக்கள் முன்பை விட நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றனர். அதிகரித்திருக்கும் நீண்ட ஆயுளுடன், நிதிப் பாதுகாப்பிற்கான தேவையும் வளர்ந்துள்ளது. ஓய்வு மற்றும் அதற்கு அப்பால் ஒரு வசதியான வாழ்க்கையைத் தக்கவைக்க கவனமான திட்டமிடுதல் ஆகியவை தேவைப்படுகிறது.


நாம் ஏன் நீண்ட காலம் வாழ்கிறோம்?


ஆயுட்கால அதிகரிப்பதற்கு பல காரணிகள் பங்களிக்கின்றன. அதில், மருத்துவ தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் மிகவும் வெளிப்படையானது. ஒரு காலத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போலியோ மற்றும் பெரியம்மை போன்ற நோய்கள் தடுப்பூசிகள் மூலம் ஒழிக்கப்பட்டுள்ளன. அல்லது கட்டுக்கள் இருக்கின்றன. நவீன மருத்துவம் பல்வேறு நிலைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதை சாத்தியமாக்கியுள்ளது. இறப்பு விகிதங்களைக் குறைத்துள்ளது. சிறந்த சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. தடுப்பு சுகாதாரம், உடற்பயிற்சி, மனநலம் மற்றும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க மக்களை ஊக்குவிக்கும் வகையில் இப்போது அதிக விழிப்புணர்வு உள்ளது.


இந்த முன்னேற்றங்கள் நிச்சயமாக கொண்டாட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும், நீண்ட காலம் வாழ்வது புதிய சவால்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக, நீடித்த நிதிப் பாதுகாப்பின் தேவை அதிகரிக்க வழி செய்திருக்கிறது. ஆயுட்காலம் அதிகரிப்பதன் காரணமாக நீண்ட நேரம் வேலை செய்ய பல தனிநபர்கள் முன்வந்தாலும், இன்னும் 20 முதல் 30 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக ஓய்வு காலம் இருக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்த நீண்ட ஓய்வு காலத்தில் வசதியான வாழ்க்கை முறையை உறுதி செய்யும் திடமான நிதித் திட்டத்தை வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.


தொற்றாத நோய்களால் அதிகரிக்கும் கவலை:


ஆயுட்காலம் அதிகரித்துள்ள அதே வேளையில், நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்களின் (NCDs) பாதிப்பும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 61% இறப்புகளுக்கு தொற்றாத நோய்களே காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நோய்களுக்கு பெரும்பாலும் நீண்ட கால மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. இதன் விளைவாக அதிக செலவுகள் சேமிப்பை கடுமையாக பாதிக்கலாம். குறிப்பாக, ஓய்வு காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.


தொற்றாத நோய்களால் வளர்ந்து வரும் மக்கள்தொகை பாதித்து வருவதால், சேமிப்பு வைத்திருப்பது அவசியம் என்பது தெளிவாகிறது. இங்குதான் HDFC Life Sanchay Plus போன்ற சேமிப்புத் திட்டம் விலைமதிப்பற்றதாக இருக்கும். இது உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஆயுள் காப்பீட்டை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நிலையான ஓய்வூதிய வருமானத்திற்கான ஆப்ஷன்களையும் வழங்குகிறது. சுகாதாரத் தேவைகள் அதிகரிக்கும்போதும் உங்கள் வாழ்க்கைத் தரத்தில் நீங்கள் சமரசம் செய்ய வேண்டியதில்லை.


HDFC Life Sanchay Plus மூலம் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்தல்:


ஆயுட்காலம் அதிகரிக்கும் போது, நீரிழிவு, இதய நோய் அல்லது புற்றுநோய் போன்ற பொதுவான தொற்றாத நோய்களில் (NCDs) ஒன்றை எதிர்கொள்ளும் நிலைமை அதிகரிக்கும். உங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியமாகிறது. நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு Hdfc life sanchay plus திட்டம் உங்களை தயாராக்குகிறது. உங்கள் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் உத்தரவாதமான வருமான ஆப்ஷன்களை வழங்குவதன் மூலம், நீண்ட மற்றும் நிறைவான வாழ்க்கையைத் திட்டமிடும்போது உங்கள் மன அமைதியை உறுதிசெய்ய உதவுகிறது.



  • குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான ஆயுள் காப்பீடு. நீங்கள் இல்லாவிட்டாலும் உங்கள் அன்புக்குரியவர்கள் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • வாழ்நாள் நீளும் வருமான விருப்பத்துடன் நிலையான ஓய்வூதிய வருமானம்: உங்கள் ஓய்வுக்காலம் முழுவதும் நிதிச் சுதந்திரத்தைப் பராமரிக்க உதவுவதன் மூலம், வாழ்க்கைக்கான உத்தரவாதமான வருமானத்தை அனுபவிக்கவும்.


கூடுதலாக, கிரிட்டிகல் இல்னஸ் (தீவிர நோய்) பிளஸ் ஆப்ஷனை தேர்வு செய்தன் மூலம் 19 தீவிர நோய்களில் ஒன்றில் நீங்கள் பாதிப்படைந்திருப்பது தெரிய வந்தால், உங்களுக்கு கூடுதல் பாதுகாப்பை இந்த திட்டம் உறுதிசெய்கிறது. உடல்நலம் மற்றும் நிதி நிலைமை நன்கு பாதுகாக்கப்படுவது உங்களுக்கு மன அமைதியை தரும். 


ஆயுட்காலம் அதிகரிக்கும் போது, நீண்ட கால நிதி திட்டமிடலின் தேவை மிகவும் அவசரமாகிறது. தொற்றாத நோய்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதாரச் செலவுகள் அதிகரித்து வருவதால், Hdfc life sanchay plus போன்ற விரிவான சேமிப்பு, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துடன் உங்களையும் உங்களின் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதி செய்கிறது. உத்தரவாதமான வருமானம், ஆயுள் காப்பீடு திட்டத்தை உங்களுக்கு ஏற்ப மாற்றி அமைப்பதற்கான ஆப்ஷன் மூலம், உங்கள் நிதிப் பாதுகாப்பு பாதுகாப்பான கைகளில் இருப்பதை அறிந்து, எதிர்காலத்தை நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.




(பொறுப்புதுறப்பு): இது, விளம்பர கட்டுரையாகும். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை ABP குழுமம் ஆதரிக்கவில்லை. மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், அறிவிப்புகள், பிரகடனங்கள், உறுதிமொழிகள், கூறப்பட்ட/சிறப்பிடப்பட்டவை போன்றவற்றிற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டோம். கூறப்பட்ட கட்டுரையில். அதன்படி, பார்வையாளர்கள் கவனமாக முடிவுகளை எடுக்க அறிவுறுத்துகிறோம்.