ரூபாய் 2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு  ரூபே கிரெடிட் கார்டு மூலம் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI)  பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதுமில்லை என நேஷனல் பேமெண்ட்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் (NPCI) தெரிவித்துள்ளது. ரூபே கிரெடிட் கார்டு கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  வணிக மற்றும் சில்லறை வணிகப் பிரிவுகளுக்கான  கடன் அட்டைகளை வங்கிகள் அனைத்துமே தொடர்ந்து வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


ருபே கிரெடிட் கார்டுகளை UPI உடன் இணைக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற, டிஜிட்டல் முறையில் இயங்கும் கிரெடிட் கார்டு பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கான எளிமை மற்றும் அதிகரித்த வாய்ப்பிலிருந்து பயனடைவார்கள். 


அசெட் லைட் க்யூஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் கிரெடிட் பயன்பாட்டு அமைப்பின் ஒரு பகுதியாக இது ஆகிறது. மற்றொரு பக்கம் இதன் மூலம் நுகர்வு அதிகரிப்பால் வணிகர்கள் பயனடைவார்கள். கிரெடிட் கார்டுகளை இப்போது விர்ச்சுவல் கட்டண முகவரியுடன் (VPA) இணைக்க முடியும், அதாவது UPI ஐடி இதனால் நேரடியாக பாதுகாப்பான  கட்டண பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது.


"பயன்பாடுகளில் கிரெடிட் கார்டில் போர்டிங் செய்யும் போது, டிவைஸ் பைண்டிங் மற்றும் யுபிஐ பின் அமைப்பு செயல்முறையானது அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்குமான கிரெடிட் கார்டு செயல்படுத்தலுக்கான வாடிக்கையாளர் ஒப்புதலாகக் கருதப்படும்," என சமீபத்திய NPCI சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


கிரெடிட் கார்டுகளில் சர்வதேச பரிவர்த்தனையை செயல்படுத்துவதற்கு, தற்போதுள்ள ஆப் விதிமுறைகள் பொருந்தும் என்று அக்டோபர் 4 தேதியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரூபாய் 2,000க்கு குறைவான மற்றும் அதற்கு சமமான பரிவர்த்தனை தொகை வரையிலான பரிவர்த்தனைக்கு நில் மெர்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் பொருந்தும் என்று அது குறிப்பிட்டது.




வணிகத் தள்ளுபடி வீதம் அதாவது மெர்ச்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட் (MDR) என்பது ஒரு வணிகர் தனது கணக்குகளில் பணம் செலுத்துவதற்காக ஒவ்வொரு முறையும் ஒரு கார்டைப் பயன்படுத்தும் போது, ​​தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் பணம் பெறுவதற்காக வங்கிக்கு செலுத்தும் செலவாகும்.


தற்போது யூனியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகியவை இந்தவகைக கார்டுகளை வழங்குகின்றன.


இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் செப்டம்பர் 21 அன்று ரூபே கிரெடிட் கார்டை யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) நெட்வொர்க்கில் அறிமுகப்படுத்தினார், இது கடன் அட்டைக்கான சந்தையை கிட்டத்தட்ட ஐந்து மடங்கு வரை விரிவுபடுத்தும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.