Stock Market Update: இந்திய பங்குச்சந்தை முடிவடைந்துள்ளது.


மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 29.07அல்லது 0.044% புள்ளிகள் குறைந்து 66,455.71 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 8.25 அல்லது 0.042% புள்ளிகள் உயர்ந்து 19,680,60 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. 


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ட்ஜெ.எஸ்.டபுள்யு, என்.டி.பி.சி., அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி எண்டர்பிரைசிஸ், அதானி போர்ட்ஸ், டைட்டன் கம்பெனி, டாடா மோட்டர்ஸ், பவர்கிரிட் கார்ப்,, எம் அண்ட் எம்., ஓன்.என்.ஜி.சி., டிவிஸ் லேப்ஸ், டாக்டர், ரெட்டி லேப்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, சிப்ளா, ஈச்சர் மோட்டர்ஸ், பஜார்ஜ் ஃபினான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஹீரோ மோட்டர்கார்ப், டி.சி.எஸ். உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.


நஷ்டத்தில் வர்த்தமான நிறுவனங்கள்


ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.டி.சி.,பிரிட்டானியா, இந்தஸ்லேண்ட் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, எ.பி.ஐ. லைஃப் இன்சுரா, கோடாக மஹிந்திஃப்ரா வங்கி, யு.பி.எல்., ஆக்ஸிஸ் வங்கி, விப்ரோ, பஜார்ஜ் ஆட்டோ, பஜார்ஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், டெக் மகிந்திரா, கோல் இந்தியா, நெஸ்லே, இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.


1686 பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின். 1,754 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின. 135 பங்குகளில் மதிப்பில் மாற்றமில்லை. நிஃப்டியை பொறுத்தவரையில், டாடா ஸ்டீல், அல்ட்ராடெல் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உயர்ந்திருந்தன.


கடந்த இரண்டு வாரங்களாக சென்செக்ஸ் 66 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமானது. அமெரிக்க பங்குச்சந்தைகள் பாசிட்டிவாக நிறைவடைந்தது. வரலாற்றில் முதன் முறையாக சென்செக்ஸ் 67 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்திருந்தது. அப்படியிருக்க, இன்று சென்செக்ஸ் 6 நாட்களுக்கு தொடர்ந்து உயர்ந்து வந்த சென்செக்ஸ், 800 புள்ளிகள் சரிந்தது. சில நிறுவனங்களின் முதல் காலாண்டு லாபம் எதிர்பார்த்த அளவு இல்லை. உள்ளூர் நிறுவனங்கள் பங்குகளை விற்றன. சர்வதேச அளவிலும் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது.


பல்வேறு நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்பனை செய்தது பங்குச்சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. நிஃப்டை பொறுத்தவரையில் ஸ்மால்கேப் 100 நிறுவனங்கள் பெரிதாக பர்ஃபார்ம் செய்யவில்லை.கச்சா எண்ணெய் விலை மதிப்பி டாலர் அளவில் அதிகரித்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்தது.