கொரோனா அச்சுறுத்தல், ஒமிக்ரானின் ஆரம்பம் என 2021ஆம் ஆண்டு ஒருவழியாக முடிவடைந்து புத்தாண்டு பிறக்க இருப்பதை உலகில் உள்ள அனைத்து மக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் புத்தாண்டான 2022ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. இந்திய நேரப்படி 4.30 மணிக்கு அந்நாட்டில் புத்தாண்டு பிறந்திருக்கிறது. 


இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டானது பிறக்க இருக்கிறது. ஆனால் இந்த புத்தாண்டு வழக்கமான புத்தாண்டாக இருக்கவில்லை. 


ஒமிக்ரான் அச்சுறுத்தலால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக புத்தாண்டு என்றாலே இரவு 7 மணிக்கு மேல்தான் கொண்டாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடனும், நண்பர்களுடன் வெளியே சென்று உணவு விடுதிகள், கடற்கரை, மதுபான விடுதிகள் என கொண்டாட்டம் களைகட்டும். ஆனால் இந்தமுறை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே ஹாப்பி நியூர் கொண்டாட தொடங்கிவிட்டனர். வீட்டின் டைனிங் ஹால் உணவு விடுதியாக மாறிவிட்டது. அதற்கு சாட்சி என்ன தெரியுமா? ஆன்லைன் உணவு ஆர்டர்கள் தான். 






இன்று மாலை முதல் ஆன்லைனில் உணவு ஆர்டர்  குவிந்து வருகிறது. சில மணி நேரத்துக்கு முன்பு ஸ்விக்கியில் ஒரு நிமிடத்துக்கு 7500 ஆர்டர்கள் வீதம் போடபட்டது. அதேபோல் சொமாட்டோவில் ஒரு நிமிடத்துக்கு 7100 ஆர்டர்கள் பதிவாகியுள்ளன. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் புத்தாண்டை கொண்டாட ஆயத்தமாகி இருப்பதையே இது காட்டுகிறது. நேரம் ஆக ஆக ஆர்டர்கள் மேலும் அதிகரித்துள்ளன  ஸ்விக்கியில் ஒரு நிமிடத்துக்கு 9000 ஆர்டர்கள் பதிவாகி பீக்கில் சென்றுள்ளது.






அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் முகேஷ்: அம்பானி சாம்ராஜ்யத்தின் அடுத்த சிம்மாசனம் யார்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண