பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது New swarnima scheme என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் குறித்தும், இத்திட்டத்தின் மூலம் கடன் எப்படி பெறுவது என்பது குறித்தும் தெரிந்து கொள்வோம்.
New swarnima scheme for women:
இத்திட்டத்தின் மூலம் தொழில் புரியும் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக, ரூ. 2 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 5 சதவீதம் வட்டி விதிக்கப்படுகிறது. இத்திட்டம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படும் மாநில சேனலைசின் முகமைகளால் செயல்படுத்தப்படுகிறது.
நன்மைகள்:
- சுயதொழிலுக்கு ஆண்டுக்கு 5% வீதம் ரூ.2,00,000/- மானியம் வழங்கப்படும். (மீதமுள்ள தொகை பயனாளியின் சொந்தமாக இருக்க வேண்டும்.)
- .2,00,000/- வரையிலான திட்டங்களில் பயனாளி பெண் சொந்தமாக எந்தத் தொகையும் முதலீடு செய்யத் தேவையில்லை.
தகுதிகள்:
1.விண்ணப்பதாரர் பெண்ணாக இருக்க வேண்டும்.
2.விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 18 முதல் அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும்.
3.விண்ணப்பதாரர் ஒரு தொழில்முனைவோராக இருக்க வேண்டும்
4.விண்ணப்பதாரரின் மொத்த குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ₹ 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைகள்:
1: தகுதியான விண்ணப்பதாரர் அருகே உள்ள எஸ்.சி.ஏ அலுவலகத்திற்குச் சென்று, பெண்களுக்கான ஸ்வர்னிமா திட்டத்திற்கான பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
2.விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களை குறிப்பிட்டு, தொழில் மற்றும் பயிற்சி தேவைகள் ஏதேனும் இருந்தால் குறிப்பிடவும்.
தேவையான ஆவணங்கள்:
1.அடையாளச் சான்று (ஆதார் அட்டை)
2.ரேஷன் அட்டை
3.இருப்பிடச் சான்றிதழ்
4.சாதிச் சான்றிதழ் (இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு)
5.விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
திருப்பி செலுத்துதல்:
கடன் அதிகபட்சம் 8 ஆண்டுகளில் காலாண்டு தவணைகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் (அசல் வசூலில் ஆறு மாத தடைக்காலம் உட்பட)
மேலும் விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும் ,அதுவே இறுதியானதாகும். அதற்கான இணைப்பை பெற இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். https://nbcfdc.gov.in/