புதிய நிதியாண்டு இன்று தொடக்கம்:
புதிய நிதியாண்டு இன்று (ஏப்ரல் 1) முதல் தொடங்க உள்ளது. இதன் காரணமாக, பல மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, மக்கள் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் வருமான வரி விதிகளும் அமலுக்கு வருகிறது. இது, வரி செலுத்தும் பலருக்கு பலன் அளிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2024-25ஆம் நிதியாண்டுக்கான் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் 2024-25 நிதியாண்டுக்கான வரி விகித முறை வரி செலுத்துவோர் தேர்த்தெடுத்து கொள்ளமுடியும். அதாவது, பழைய வரி விதிப்பு முறை (Old Tax Regime) மற்றும் புதிய வரி வதிப்பு முறை (New Tax Regime) இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
புதிய வரி விதிப்பு முறை:
புதிய வரி விதிப்பை தேர்வு செய்பவர்கள், புதிய அடுக்குகளின்படி வரி விதிக்கப்படும். புதிய வரி முறையின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ள தனிநபர்களுக்கு வரி விதிக்கப்படாது. 3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் வரையிலான வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.
ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை 10 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம் வரி விதிக்கப்படும் ரூ.15 லட்சம் மற்றும் அதற்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பழைய வரி விதிப்பு முறையில் ((Old Tax Regime) மட்டுமே ரூ.50,000 விலக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது புதிய வரி விதிப்பு முறையிலும் ரூ.50000 விலக்கு அளிக்கும் முறை பொருந்தும். அதேபோல, புதிய வரி விதிப்பு முறையின்படி, ரூ.2.5 லட்சம் முதல் 3 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி செலுத்த வேண்டியது இல்லை.
மேலும், ரூ.5 கோடிக்கு மேற்பட்ட வருமானத்திற்கு விதிக்கப்படும் அதிகபட்ச கூடுதல் வரி (Surcharge) 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பெரும் செல்வந்தவர்களுக்கு வரிச் சுமையை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி விதிப்பு முறையின்படி, ரூ.7 லட்சம் அல்லது அதற்கு குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு வரி சலுகையானது ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர் அல்லாதோருக்கு வழங்கப்படும் விடுப்பு சம்பளத்திற்கான (Leave Encashment) வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.