ஆதார், பான் போன்ற அடையாள அட்டகளை போலவே, பலரது வாலட்களிலும், தற்போது கிரெடிட் கார்ட் இடம்பெற்ற்றுள்ளது என்றே சொல்லலாம். பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை வைத்துள்ளனர். நிலையான வருமானம் இல்லாதவர்கள் கூட கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களானது, வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிகரிக்கும் கிரெடிட் கார்டு பயன்பாடு:
இந்நிலையில், கிரெடிட் கார்டு வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டேவருகிறது. குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அதன் பயன்பாடு அதிகம் உள்ளது. தாங்கள் வாங்க வேண்டிய பொருள்களை கிரெடிட் கார்டு மூலம் வாங்கி, பின்னர் மாதத்தின் தொடக்கத்தில் அதற்கான தொகையை செலுத்திக் கொள்ளலாம்.
இதனால், அந்த தருணத்தில் அவசரமாக பணம் தேவைப்படும் போது, நாம் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தொகையை செலுத்த வேண்டும். மாதா மாதம் செலுத்த வேண்டிய தொகையே நிலவை தொகை என அழைக்கப்படுகிறது.
மாற்றங்கள்:
வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் கிரெடிட் கார்டு சேவையில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. அதனடிப்படையில், விமான டிக்கெட் முன்பதிவு செய்தல் மற்றும் ஹோட்டல்களை முன்பதிவு செய்தல் ஆகியவற்றில் ரிவார்டு புள்ளிகளின் எண்ணிக்கையை வங்கிகள் நிர்ணயிக்கும்.
மொத்த செலவில் 70% அல்லது மாதாந்திர அதிகபட்சம் அட்டைதாரர்கள் தங்கள் வெகுமதி புள்ளிகளைப் பயன்படுத்த முடியும். அதன்படி தனிப்பட்ட பிரைம் கார்டுகள் 6 லட்சம் புள்ளிகள், மார்க்யூ கார்டு 3 ஆயிரம் புள்ளிகள், ரிசர்வ் கார்டு 2 ஆயிரம் புள்ளிகள், யெஸ் பேங்க் கிரெடிட் கார்டுகள் ஒரு லட்சம் புள்ளிகள் என கூறப்பட்டுள்ளது.