பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 32 லிருந்து ரூ. 35 ஆக உயர்த்தப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிவித்துள்ளது. இதேபோல் எருமை மாட்டுப்பால் கொள்முதல் விலை ரூ. 41 லிருந்து ரூ. 44 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்முதல் விலை வரும் 5ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.