குளோபல் ஹெல்த் நிறுவனம் அதன் பங்கு விலையை ரூபாய் 316-319 என நிர்ணயம் செய்து அறிவித்திருந்தது.
இந்நிலையில் குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் கீழ் இயங்கும் மேதாந்தா எனும் பெயரில் மருத்துவமனைகளை நடத்தி வரும் மேதாந்தா நிறுவனம் பங்கு வெளியீட்டின் வாயிலாக 2,206 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடு நவம்பர் 3 -ஆம் தேதி முதல் அதாவது நேற்று முதல் நவம்பர் 7-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
மேதாந்தா நிறுவனம் பங்குகளை வெளியிட்ட முதல் நாளே முதலீட்டாளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. அதன்படி பங்குகளை விற்பனை செய்வது மூலம் 26% பங்குதாரர்களை பெற்றுள்ளது. அதன்படி இன்றும் மேதாந்தா நிறுவனம் தங்களது பங்குகளை விற்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி நேற்றை விட இன்றைய விற்பனை 0.35 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ’initial public offering (IPO)’ மூலம் ரூ. 2,206 கோடி அளவிற்கு முதலீடு திரட்ட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவன சந்தை நிபுணர்களின் தகவலின்படி, குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் பங்குகள் க்ரே மார்கெட்டில் (premium (GMP)) பிரிவில் ரூ. 15-க்கு கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேதாந்தா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் ஒரு பிரிவாக ’மேதாந்தா தி மெடிசிட்டி’ குர்காம் நகரில் உள்ளது. இந்நிறுவனத்தின் மருத்துவர் டாக்டர் தெர்ஹான் மிகவும் பிரபலமானவர். குளோபல் ஹெல்த் நிறுவனம் டாக்டர் நரேஷ் தெர்ஹான் நிறுவப்பட்டது. இதய அறுவை சிகிச்சை நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் இவர். இந்த மருத்துவமனை இந்தியாவின் கிழக்கு மற்றும் வட பகுதிகளில் உள்ள மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இது பல்நோக்கு மருத்துவமனையாகவும் திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் மருத்துவனையில் 1,300 சிறப்பு மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். இதய நிபுணத்துவம், நரம்பியல் மருத்துவம், புற்றுநோய் மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மேதாந்தா மருத்துவமனை மூன்று ஆண்டுகளாக அதாவது 2020, 2021, 2022 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்தியாவில் சிறந்த தனியார் மருத்துவமனையின் தரவரிசைப்பட்டியலில் மேதாந்தா மருத்துவமனை இடம்பெற்றுள்ளது. மேலும் 2021-ஆம் ஆண்டில் சிறந்த 200 உலகளாவிய மருத்துவமனைகளின் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய தனியார் மருத்துவமனை மேதாந்தா ஆகும்.