இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சுரன்ஸ் நிறுவனமான எல்.சி.சி. யின்(Life Insurance Corporation of India (LIC)) பங்கு விலை 6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு பங்கின் விலை ரூ. 668 ஆக வர்த்தமாகிறது. எல்.ஐ.சி. பங்கு மதிப்பு தொடர்ந்து பத்தாவது முறையாக குறைந்துள்ளது. இந்தியாவிலேயே 7-வது பெரும் நிறுவனமான எல்.ஐ.சி. யின் பங்கு வீழ்ச்சி பங்குச்சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எல்.ஐ.சி பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி மே.9 ஆம் தேதி வரை நடைபெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எல்.ஐ.சி நிறுவனத்தின் மதிப்பு, பங்கு வெளியீட்டின் போது ரூ. 6.02 லட்சம் கோடியாக இருந்தது. தொடர் சரிவு காரணமாக அதன் மதிப்பு ரூ. 1.40 லட்சம் கோடி குறைந்திருக்கிறது.
ரஷ்யா-உக்ரைன் போர், பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி உள்ளட்டவைகள் எல்.ஐ.சி. பங்கு மதிப்பிழப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஒரு மாதத்தில் ரூ.1.65 லட்சம் கோடி மதிப்பு இழப்பு:
பணவீக்கம், வட்டி விகித உயர்வு, பங்குச் சந்தை தொடர் சரிவு, உள்ளிட்டவைகள் எல்ஐசி பங்கு விலை வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. பங்குகளின் விலை குறைவாக உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் சந்தை நிலவரத்தை கவனித்து செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலை மாறும் வரை காத்திருந்து முதலீட்டாளர்கள் செயல்படுவது தேவையற்ற இழப்புகளில் இருந்து பாதுகாக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்