LIC Lost 50,000 crore: அதானி பங்குகள் சரிவு.. 50 நாட்களில் 50,000 கோடிகளை இழந்த எல்ஐசி..

அதானி நிறுவன பங்குகளின் சரிவால் எல்.ஐ.சி. நிறுவனம் ஐம்பதே நாட்களில் 50 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

அதானி நிறுவன பங்குகளின் சரிவால் எல்.ஐ.சி. நிறுவனம் ஐம்பதே நாட்களில் 50 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

ரூ.50,000 கோடி இழப்பு:

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, அதானி குழுமத்தில் எல்ஐசி செய்த முதலீடு மதிப்பானது 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில், கிட்டத்தட்ட ரூ.83,000 கோடியாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்ளாக பங்குச்சந்தையில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் காரணமாக, கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வரையில் அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த முதலீடுகளின் மதிப்பு ரூ.33,000 கோடியாக சரிந்துள்ளது. இதன் மூலம் கடந்த 50 நாட்களில் எல்.ஐ.சி. 50 ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக துறைசார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும் இழப்பிற்கான காரணம் என்ன?

தொடர்ந்து அபார வளர்ச்சி கண்டு வந்த அதானி குழுமத்தின் பங்குகள், கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால் தொடர்ந்து பெரும் சரிவை கண்டது.  இதற்கு காரணம், போலி முதலீடுகள் மூலம் அதானி நிறுவனம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாக, ஹிண்டன்பெர்க்கின் ஆய்வறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டு இருந்ததே. இதனால், இந்திய பங்குச்சந்தையில் ஒரு சில நாட்களிலேயே, சில லட்சம் கோடிகளை அதானி குழுமம் இழந்தது. இதனால் எல்.ஐ.சி. நிறுவனமும் ஜனவரி 30ஆம் தேதிக்குப் பிறகு அதானி குழுமத்தின் எந்த விதமான பங்குகளையும் வாங்கவோ விற்கவோ இல்லை என்று கருதப்படுகிறது.

அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு:

அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்.ஐ.சி. 1.28 சதவிகிதம் முதல் 9.14 சதவிகிதம் வரை வாங்கி உள்ளது. அதானி போர்ட்ஸ் பங்குகளில் 9 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி கைவசம் உள்ளது. இதன் மதிப்பு ஜனவரியில் 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 11 ஆயிரம் கோடி ரூபாயாகக் சரிந்துள்ளது. இதுபோல அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 4.23 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள அதானி குழுமத்தின் பங்குகளில், எல்ஐசியின் முதலீட்டு மதிப்பும் 25,500 கோடியிலிருந்து ரூ.5,200 கோடியாக சரிவடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பங்குச் சந்தைகளில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணக்காரர்கள் பட்டியல்:

உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அதானி,  பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால் பெரும் பின்னடைவை சந்தித்தார். தற்போது அவர், 3.36 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 27வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola